இந்து - பௌத்த சகோதரத்துவம் நாட்டுக்கு அவசியமாகும் - வவுனியாவில் அத்துரலிய

Published By: Vishnu

14 Jun, 2019 | 05:04 PM
image

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும். அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். 

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நாம் வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளோம். 

நாட்டில் தற்போது இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் இந்து - பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04