அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவின் வளர்ச்சியை பகுத்தறிவுடன் நோக்கவேண்டிய நேரம்

Published By: R. Kalaichelvan

14 Jun, 2019 | 03:23 PM
image

 பெய்ஜிங், ( சின்ஹுவா ) வாஷிங்டனில் உள்ள கடும்போக்கு அரசியல்வாதிகள் சிலர் சீனாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கும் உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கும் இடையில் மோதலை மூட்டிவிடுவதற்கும் சகல வழிகளிலும்  முயற்சி செய்துகொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

சகல முனைகளிலும் உலக மேலாதிக்கத்தை அமெரிக்காவே எல்லாக்காலங்களிலும் பேணும் என்ற ஆழமாக வேரூன்றிவிட்ட எண்ணம் காரணமாக அவர்களால் கடந்த நான்கு தசாப்த காலமாக சீனா கண்டுவந்திருக்கும் துரித வளர்ச்சியை ஜீரணிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக சீனாவின் வளர்ச்சியை காணும் அவர்கள் பெய்ஜிங்கின் உள்நாட்டுக்கொள்கையையும் உலகில் அதன் பாத்திரத்தையும் பற்றி யதார்த்த நிலையில் இருந்து பெருமளவுக்கு விடுபட்ட பல்வேறு விமர்சனங்களைச் செய்துவந்திருக்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பலருக்கு சீனா மீதான அத்தகைய முழுவீச்சான தாக்குதல்கள் நியாயமானவையாகவோ அல்லது பயன் எதையும் தரக்கூடியவையாகவோ தெரியவில்லை.

வளர்ச்சியடைவதில் இருந்தும் பலம் பெறுவதிலிருந்தும் சீனாவைத்தடுக்க எந்த நாடுமே மேற்கொள்ளக்கூடிய பிரயத்தனம் எதுவும்  ஒப்பேறக்கூடியதோ அல்லது விவேகமானதோ அல்ல என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கூறினார். சீனாவுக்கு கதவை அடைத்து  வெளியில் விடுவதற்கு முயற்சிப்பதை காட்டிலும் பிராந்திய மற்றும் உலக ஆட்சிமுறையில் சீனா சம்பந்தப்படுவதை வாஷிங்டன் " நாகரிகமான முறையில்  வழிவிட வேண்டும் " என்று அமெரிக்காவின் முன்னாள் உதவி பாதுகாப்பு அமைச்சர் ஷாஸ் ஃபிரீமன் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆராய்ச்சிகளைச் செய்வதற்கும் அபிவிருத்தியைக் காண்பதற்குமான நல்ல ஆற்றலையும் வல்லமையையும் கிழக்குலகிலும் காணமுடியும் என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹமத் கூறுகிறார்.

அண்மைய தசாப்தங்களாக சீனா கண்டுவந்திருக்கும் வியக்கத்தக்க மாற்றம் அதன் மக்களின் கடும்்உழைப்பின் விளைவானது. அத்துடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் ஆழமான சீர்திருத்தங்களும்  திறந்தபோக்கும் உலக விவகாரங்களில் சீனாவின் துடிப்பான பங்கேற்பும் உலக சமாதானத்துக்கும் சுபிட்சத்துக்கும் பங்களிப்புச் செய்திருக்கின்றன.

 உலக அரசியல் படிமுறை வளர்ச்சியடைந்துகொண்டிருக்கும் நிலையில், தனித்துச்செயற்படுவது என்பது கடந்த கால விடயமாகிப்போய்விட்டது.பல நாடுகள் சேர்ந்து இயங்குகின்ற பல்தரப்புவாதமே பரவலாக ஆரத்தழுவப்படு்ம் போக்காக இருக்கிறது.

உலக முன்னேற்றம் என்பது சகல தரப்புகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலான இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளத் தவறும் கடும்போக்கு அமெரிக்கர்கள் சிலர் சீனாவுக்கு எதிராகச் செயற்படுவதற்கு பங்காளிகளைச் சேர்த்துக்கொள்வதற்குக் கூட முயற்சித்தார்கள்.ஆனால், அவர்களின் திட்டங்கள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

வலுச்சண்டைக்குப்போகிற தன்மையான -அடாவடித்தனமான தந்திரோபாயங்களை  வாஷிங்டன் அடிக்கடி பயன்படுத்துவதால் சர்வதேச சமூகம் பெருமளவுக்கு சினமடைந்திருக்கிறது.சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் உடன்படிக்கைகளில் இருந்தும் அமெரிக்கா அடிக்கடி விலகுகிறது  தனது நலன்களுக்காக அது திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்வதுடன் ஆத்திரமூட்டும் காரியங்களிலும் ஈடுபடுகிறது.

மற்றைய நாடுகளுடன் சேர்ந்து பொதுவான சுபிட்சத்தை காண்பதற்கு சீனா நாட்டம் கொண்டிருப்பதால் அதன் வளர்ச்சியை உலகம் பெரும்பாலும் வரவேற்றிருக்கிறது.திறந்த போக்கு கொள்கையைக் கடைப்பிடித்து உலக பொருளாதாரத்துடன் துடிப்பாக ஒன்றிணைவதுடன் நவீன பட்டுப்பாதை என்று வர்ணிக்கப்படுகின்ற ' மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ' போன்ற களங்களின் ஊடாக பிராந்திய மற்றும் உலக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமாகவே அந்த பொதுவான சுபிட்சத்தை அடைய சீனா முயற்சிக்கின்றது.

கடுந்தொனியில் பேசுகின்ற அந்த அமெரிக்க அரசியல்வாதிகள்,  மோதல்போக்கிற்கு பதிலாக ஒத்துழைத்துச் செயற்படுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்ற உலகளாவிய அழைப்புக்கு செவிமடுக்கவேண்டும் ; மற்றைய நாடுகளுடனான உறவுகளில் முழுமையான பயன்களும் தனக்கே கிட்டவேண்டும் என்ற மனோபாவத்தையும் வாஷிங்டன் கைவிடவேண்டும்.

"முதலில் அமெரிக்கா " என்ற கொள்கையை வலிந்து திணிப்பது "அமெரிக்கா தனியே " என்ற நிலைக்கு மாத்திரமே வழிவகுக்கும்.

( சின்ஹுவா செய்தியாளர் குவோ யாகே எழுதியது )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04