அமைச்சர்  ராஜிதவின்  குடியுரிமையை பறிக்க கோரி வைத்தியர்கள்  ஆர்ப்பாட்டம். 

Published By: R. Kalaichelvan

14 Jun, 2019 | 06:00 PM
image

(ஆர்.விதுஷா)

சுகாதார அமைச்சில்  இடம் பெறுகின்ற  ஊழல் மோசடிகள்  , முறைகேடுகளுக்கு  சுகாதார  மற்றும்  சுதேச மருத்துவ அமைச்சர்  ராஜித சேனாரத்ன பொறுப்பு என்று தொடர்ச்சியாக  குற்றஞ்சாட்டி  வரும்  அரசாங்க  வைத்திய அதிகாரிகள் சங்கம் அவரின்  குடியுரிமையைப்பறிக்கக்கோரி  நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல்  12 மணியளவில்  நான்கு பிரதான வைத்தியசாலைகளின்  முன்பாக  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி  போதனாவைத்தியசாலை , அநுராதபுரம்  போதனாவைத்தியசாலை  வவுனியா  மாவட்ட  வைத்தியசாலை  ஆகியவற்றிலே  இந்த  ஆர்ப்பாட்டங்கள்  இடம்  பெற்றன. 

அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தினரால் கடந்த  திங்கட்கிழமையிலிருந்து  நாடளாவிய  ரீதியில் எதிர்ப்பு  நடவடிக்கைகள்  இடம் பெற்றுகின்றன.   

இந்த  நிலையில் நான்கு பிரதான  வைத்திய  சாலைகளுக்கு  முன்பாக  நேற்று  இடம் பெற்ற எதிர்பபு  ஆர்ப்பாட்டங்களில்  ஒரு  அங்கமாக   கொழும்பு  தேசிய  வைத்திய சாலைக்கு  முன்பாக இடம் பெற்ற  ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும்  அதிகமான  வைத்தியர்கள்  கலந்து  கொண்டதுடன்,  பாதாகைகளை  ஏந்திய  வண்ணமும்  கோஷங்களை  எழுப்பிய  வாறும்  தமது  எதிர்ப்பினை  வெளிப்படுத்தினர்.

இதன்போது ,புற்றுநோயாளர்களின் வாழ்வை  கேள்விக்குறியாக்கிய  சுகாதார  அமைச்சரை வீட்டிற்கு  அனுப்பு , நெவில்  பெர்னாண்டோ  வைத்திய சாலை  ஊழலை  நாட்டிலிருந்து ஒழிக்க  வேண்டும்  , மருந்துகள்  அதிகாரசபையை  மருந்துகள்  மாபியாவுக்கு  வசப்படுத்த  வேண்டாம், தரமற்ற  மருந்தை  கொண்டுவந்த  ராஜிதவின் குடியுரிமையை  நீக்க  வேண்டும்  , மருந்துப் பொருள்  கொள்வனவு  மோசடியை  நிறுத்து  என்ற  கோஷங்கள்  எழுதப்பட்ட  பதாகைகளை  ஏந்தியவாறும்  அமைச்சர்  ராஜித சேனாரத்னவிற்கு  எதிராக  குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய  பதாகைகளை  ஏற்திய  வாறு  கோஷங்களையும் எழுப்பினர்.  

வைத்தியசாலை வட்டாரத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்  வகையில் பொலிசார்  கடமைகளில்  ஈடுபட்டனர்.இதேவேளை அமைச்சர்  ராஜிதவுக்கு எதிரான  குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கிய   துண்டுப்பிரசுரங்களும் வைத்தியர்களினால்  பொது  மக்களுக்கு  விநியோகிக்கப்பட்டது. 

ஆர்ப்பாட்டகாரர்கள்  மத்தியில்  ஊடகங்களுக்கு  கருத்து  தெரிவித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித்  அளுத்கே  கூறியதாவது  ,  

சுகாதாரத்துறையில்  ராஜித  சேனாரத்னவினால்  பாரிய அளவில் ஊழல் இடம் பெற்றுள்ளது. அவர்  சுகாதார அமைச்சுக்கு  மட்டுமல்ல  நாட்டு  மக்களுக்கும்  பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளார்.  ஆகவே  அவரின்  குடியுரிமையை  நீக்க  வேண்டும்.  

கர்பிணித்தாய்மாருக்கு கொடுக்கும்  மருந்து  பொருட்களில் தரமற்ற காலாவதியான மருந்துப்பொருட்களை இறக்குமதி  செய்தமையின்  ஊடாக  தாய்மாரினதும்  குழந்தைகளினதும்  உயிருக்கு ஆபத்தான  நிலையை  ஏற்படத்தியுள்ளார்.  

இதே  போல்  நெவில்  பெர்னாண்டோ  வைத்தியசாலையை  அரசாங்கம்  பொறுப்பேற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன  கூறிக்கொண்ட  போதிலும்  ,  இதுவரையிலும்  அந்த  வைத்திய சாலை  தனியார்  வைத்தியசாலையாகவே  இயங்குகின்றது. அந்த வைத்தியசாலைக்காக   500 கோடி ரூபாய் வரையிலான  மக்களின்  பணம்  அநாவசியமாக  தனியார்  வைத்தியசாலைக்கு  செலவிடப்பட்டுள்ளது.  

ராஜிதவிற்கு  எதிராக   மக்களின் சார்பான  நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை  கொண்டு வருவதற்காக  அனைத்து  பாகங்களிலுமுள்ள   5 இலட்சம்  வரையிலான  பொது  மக்களின்  கையொப்பங்களை  திரட்டும்  நடவடிக்கைகளையம்  களுத்துறையிலிருந்து  ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14