அம்பலமாகியது ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்தும் முயற்சி

Published By: Daya

14 Jun, 2019 | 11:59 AM
image

மியன்மாரிலிருந்து மலேஷியாவுக்கு 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் படகு விபத்துக்குள்ளானதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

2015 காலக்கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள், மற்றும் பங்களாதேசவர் களை மலேஷியாவுக்கு கடத்தும் முயற்சிகள் இதே கடல் பகுதியில் நடைபெற்றிருக்கின்றன. இப்போது, மீண்டும் அதே வழித்தடத்தில் இக்கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

இதில் மீட்கப்பட்டுள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகளும் சதுன்(Satun) மாகாண பொலிஸ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

“இவர்களை மலேஷியாவுக்கு அழைத்து செல்ல மியன்மாரை சேர்ந்த ஒருவரால் படகோட்டிக்கு சுமார் 2 லட்சம் ரூபா கொடுக்கப்பட்டிருக்கின்றது,” என பொலிஸ் ஜெனரல் சுச்சர்ட் தீராசவாத் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். 

மீட்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்கள் அகதிகளா அல்லது சட்டவிரோத தொழிலாளர்களா என்பதை கண்டறிய விசாரணையைத் தீவிரப்படுத்தமாறு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒ-சா அறிவுறுத்தியுள்ளதாக அரசின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19