தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்று கொடுக்குமாறும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றி கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய தமிழர் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ' 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுகொடு, தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காதே,  தொழிலாளர்களை அடகு வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.