‘ சமபாலினத்தவர்களுக்கு சமூகத்தின் மத்தியில் அங்கீகாரத்தை வழங்க திட்டங்கள் அவசியம் ”

Published By: Digital Desk 4

14 Jun, 2019 | 12:22 PM
image

(ஆர்.விதுஷா)

சட்டவிரோதமாக பாலியல்  தொழிலில்  ஈடுபடுபவர்களுக்கு எதிராக  பயன்படத்தப்படுகின்ற  சட்டம்   ஏற்பாடுகள்  ஒட்டுமொத்த  சமபாலின சமூகத்தவர்களின்   வாழ்க்கையை  பாதிக்கின்றது. ஆயினும்  ஏனைய  நாடுகள்  சமபாலினத்தவர்களின்   உரிமைகளுக்கு  முக்கியத்துவம்  வழங்குகின்றன.  

இலங்கையில்   இவர்கள்  மீது  திணிக்கப்படும் சட்ட  ஏற்பாடுகள்  திருத்தப்படவேண்டியவையாகும். எனவே எதிர்காலத்தில்  சமபாலின  சமூகத்தின்  உரிமைகளை பாதுகாக்கக்கூடிய  தெளிவான சட்ட விதிகள்  உருவாக்கப்படவேண்டும் என்றும்  , சமூகங்கள்  மத்தியில்   அவர்களுக்கு  அங்கீகாரத்தை  வழங்குவதற்கான  திட்டங்களை  ஏற்படுத்தி கொடுக்கவேண்டியது அவசியம் என  ஈக்குவல் கிரௌண்ட்  அமைப்பு  கோருகிறது.  

சமபாலின சமூகத்தவரை  ஒன்றிணைக்கும் வகையில்  ஆண்டு  தோறும்  உலகளாவிய  ரீதியில்  பல்வேறு  நிகழ்வுகள்  இடம் பெற்றுவருகின்ற நிலையில் ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின் 15 ஆம்  ஆண்டு  பூர்த்தியை  முன்னிட்டு   “ நாம்  ஒரு  குடும்பம்   “ என்னும்  தொனிப்பொருளில்   இலங்கையிலும்  பல்வேறு  நிகழ்வுகள்  இடம் பெற்று  வருகின்றன.  

அந்த நிகழ்வுகளின்  ஒரு  அங்கமாக  ஊடக மாநாடொன்று  நேற்று புதன்கிழமை  கொழும்பு  ரேணூகா  ஹேட்டலில்  இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின்  நிர்வாக  பணிப்பாளர்  ரோஸான  ப்லேமர்  கல்தேரா  ,  திட்டமிடல்  அதிகாரி  மது ரூபசின்ஹ  உள்ளிட்ட  பலரும்  கலந்து  கொண்டதுடன், சமபாலினத்தவர்  எதிர்நோக்கும் பிரச்சினைகள்  மற்றும்  அந்த சமூகத்தவருடன்  தொடர்புடைய  செய்தி  அறிக்கையிடலின்  போது  கையாள  வேண்டிய   நெறிமுறைகள்  தொடர்பில்  தெளிவு  படுத்தல்களை  வழங்கினர்.  

ஈக்குவல் கிரௌண்ட் அமைப்பின்  நிர்வாக  பணிப்பாளர்  ரோஸான  ப்லேமர்  கல்தேரா  கூறுகையில்  ,  

இலங்கையை  பொறுத்த  வரையில் சமபாலினத்தவர்கள்   பாரிய சவால்களை  எதிர்கொள்ள  நேரிடுகின்றது.  பாலியல்  நாட்டம்  என்பது ஒரே  பாலினத்தவர்  மீது   அல்லது  எதிர்  பாலினத்தின்  மற்றொரு  நபர்  மீது உடல்  உளவியல்  மற்றும்  காதல்  ஈர்ப்பினை  கொண்டிருப்பதை  குறிக்கும்.  

சமபாலினத்தவர்களின்  திருமணத்திற்கு  சுமார் 23 நாடுகள்  வரையில்  அங்கீகாரம் வழங்கியுள்ள  நிலையில்  சமபாலினத்தவரை  ஒன்றிணைக்கும்  வரையிலான  நிகழ்வுகள் ஒவ்வொரு  வருடமும்   ஜூன்  மாதத்தில் ஏற்பாடு  செய்யப்பட்டு  வருகின்றது.  

அந்த  வகையில்  இலங்கையிலும் “ நாம்  ஒரு  குடும்பம்  “   என்னும்  தொனிப்பொருளில்  கடந்த 10ஆம்  திகதியிலிருந்து   எதிர்வரும்  23ஆம்  திகதி வரை  பல்வேறு  நிகழ்வுகள்  இடம் பெற்று வரகின்றன.   

அதற்கமைய  இலங்கையில் எமது நிறுவனம்  சமபாலினத்வருடன்  கைகோர்த்து   உதவிய  நலன்விரும்பிகள்  , வணிகர்கள்  ஆகியோரை  கௌரவிக்கும் வகையில்  “சமத்துவத்திற்கான  போராளிகள்  “  என்னும்  விருது   வழங்கல்  விழாவுடன்   கொழும்பின்  பெருமை  என்னும்  நிகழ்வுகள்  ஆரம்பமாகியுள்ளன.  

அவற்றில்  அபிமானி  திரைப்படவிழாவும்  ஒன்றாகும். இது தெற்காசியாவிலும் எமது நாட்டிலும்  மிகவும்  பழமை வாய்ந்த  விழாவாகும்  . இந்த  திரைப்படவிழாவானது  இலங்கையின்  திரைப்பட வெளியீட்டு  சங்கத்தின்  அனுமதியை  பெற்றிருப்பது  சிறப்பம்சமாகும்.இத்தகைய  சிறப்பு  மிக்க  அபிமானி  திரைப்பட விழா   லக்ஷ்மன் கதிகாமர் கற்கை நிலையத்தில்  இடம் பெறவுள்ளது. 

இதன் ஏனைய  நிகழ்வுகளாக  ஓரினச்சேர்கையாளர்களின்  குடும்ப  அங்கத்தவர்கள்  மற்றும்  நண்பர்களின் ஒன்றுகூடல்  மற்றும்   ஊடக  மாநாடு  என்பன  அமைகின்றன. 

திட்டமிடல்  அதிகாரி  மது ரூபசின்ஹ கூறுகையில்  , 

சமபாலினத்தவர்களுடைய   உரிமைகளை  பாதுகாப்பது  முக்கியமானதொரு  விடயமாகும்.  அந்தவகையில் , சமபாலின  நாட்டமென்பது  ஒருவகை  உணர்வாகும்.   இத்தகைய  உணர்வு  எதிர்  பாலினத்தவர்  மீதோ, ஓரேபாலினத்தவரின்  மீதோ  ஏற்படலாம்.   

ஆகவே  , இவ்வாறான ஓரினச்சேர்கையாளர்களை   புறந்தள்ளும்  எண்ணத்தை  விடுத்து அவர்களையும்  சமூகத்தில்  ஒருவராக  ஏற்றுக்கொள்ளவேண்டியது  அவசியமாகும்.  ஆண்  , பெண்  இருபாலாரும் சமனானவர்கள் என  கூறிக்கொண்ட  போதிலும்  சமூகத்தில்  ஏற்றத்தாழ்வுகள்  இருந்த வண்ணமே  உள்ளது.  

அத்துடன்,  சமபாலினத்தவர்  மீது  ஏற்படும் நாட்டமென்பது   ஹோமோன்  மாற்றங்களினால்  ஏற்படுத்தப்படுவதாகும்  .  இந்த நிலையில்  ஒரு  ஆண் பெண்காக  தன்னை  அடையாளப்படுதத்திக்கொள்ள  விரும்புவதுடன்   , சில  சமயங்களில்  பெண்  தன்னை  ஆணாக  அடையாளப்படுத்திக்கொள்ள  விரும்புகின்றனர்.  

கொழும்பு  மாவட்டத்தில்  மாத்திரம்  19வீதமானவர்கள்  தாம்  எந்த  பாலினத்தவர்  என்று  அறியாத நிலையில்  உள்ளனர்.  ஏனெனில்  அவர்கள்  சமபாலினத்தவர்களாகவிருப்பின்  அவர்களை  சமூகம்  ஏற்றுக்கொள்ளாது என்ற  அச்சத்தில்  வெளிவராது  முடங்கியுள்ளனர்.  

சட்டம் 

ஓரினச்சேர்கை  எமது  சட்டதிட்டங்களுக்கு  அமைய  அங்கீகரிக்கப்படவில்லை.  ஆகவே , இத்தகைய  செயலில்  ஈடுபடுதல் என்பது  தண்டனைக்குரிய  குற்றமாகும்.   அதற்கமைய  1833ஆம்  ஆண்டில்  இயற்றப்பட்ட  தண்டனை  சட்டக்கோவையின்  பிரிவு  365 மற்றும்  364(அ) பிரிவுகளின்  படி   ஓரினச்சேர்கை  தண்டனைக்குரிய  குற்றமாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  

தண்டனை  சட்டக் கோவையில்  உள்ள  இந்த பிரிவுகளில் ஒழுங்காக  விளக்கம் பெறாமல் காணப்படுவதால்  ஓரினச்சேர்கையாளர்களை  பொலிசார்  எவ்வித  தடையுமின்றி  கைது  செய்யவும்  , தடுத்து வைக்கவும்  இயலுமாகவுள்ளது.  இவ்வாறாக கைது  செய்யப்படுபர்கள்  பாலியல்  ரீதியில்  துன்புறுத்தல்களுக்கும்  உள்ளாக  நேரிடுகின்றது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51