வலி வடக்கு பிரதேசதிற்கு வடக்கு ஆளுநர் விஜயம்

Published By: Digital Desk 4

13 Jun, 2019 | 07:47 PM
image

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார்.

அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

மேலும் இந்த விஜயத்தின்போது  ஆளுநர்

 பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு சுகிர்தன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56