நுரையீரல் பாதிப்புக்குறிய முக்கிய அறிகுறிகள்

Published By: Digital Desk 4

13 Jun, 2019 | 02:55 PM
image

எம்முடைய நுரையீரல் பகுதியை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக இரண்டு வித அடுக்குகளுடன் உறை போல் ஒரு அமைப்பு உள்ளது. இதில் பல தருணங்களில் நீர் சேர்ந்துவிடும். இத்தகைய நீர் அங்கிருந்து அகற்றுவதற்கு உடலே இருமல் என்ற ஒரு செயலை உண்டாக்கி அதனை சளியாக வெளியேற்றும். சில தருணங்களில் அது நடைபெறாத போது அல்லது அதனை நாம் புறகணிக்கும் போது அங்கு Pleura Disease எனப்படும் நுரையீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது.

மூச்சு விடுதலில் சிரமம், சளி பச்சையாக வெளியேறுதல், இயல்பான அளவை விட அதிக அளவில் இருமல், இருமும் போது அடிவயிறு இறுக்கிப் பிடிப்பது, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவுடன் இருமல், அடிக்கடி ஏப்பம் வருவது, ஏப்பம் வருகின்ற பொழுதும் சிலருக்கு வலி ஏற்படுவது, நாக்கு மற்றும் உதடுகளில் புண் ஏற்பட்டிருப்பது, 

நீங்கள் விடும் மூச்சுக்காற்று சூடாக இருக்கும். அதே சமயத்தில் மூக்கில் புண் ஏற்பட்டு இருக்கும். முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிலும் தொராசிக் மற்றும் லம்பார்ட் பகுதியில் வலி இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும் அல்லது மலம் சரியாக வெளியேறாத நிலை இருக்கும். வாய் வழியாக சளி போன்ற திரவம் வெளியேறும். 

இரத்தம் குறைவாக இருப்பது, உடல் சோர்வு, கை கால் அசதி, உடல் எடை குறைதல், உணவு உண்ண முடியாமல் இருப்பது,. உண்ணும் பொழுது ஏப்பம் வருதல், அதிகமான காய்ச்சல், சரியான தூக்கமின்மை...இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அவரிடம் விவரங்களைக் கூறி சிடி ஸ்கேன் பரிசோதனை ஒன்றை செய்து கொள்ள வேண்டும். 

ஏனெனில் உங்களது இடது பக்க நுரையீரலில் உள்ள ப்ளூரா எனப்படும் பாதுகாப்பு உறை மீது நீர்த்தேக்கம் அதிகமாக இருக்கிறது என்பதன் அறிகுறி இது.

இதனை மருத்துவர்கள் கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். இந்த தருணத்தில் சிலருக்கு இருமல் ஏற்படும். அந்த இருமல் நல்லது தான். ஏனென்றால் இருமல் மூலமாகத்தான் அங்குள்ள நீர் வெளியேறுகிறது. ஆனால் தொடர் இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

டொக்டர் ஜெயராமன்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04