மக்கள் காணிகள் இராணுவம் சவீகரித்துள்ளது: இதனை பார்க்கவே சம்பந்தன் முகாமுக்குள் சென்றார் : பிர­தமர்

Published By: MD.Lucias

01 May, 2016 | 10:35 AM
image

கிளி­நொச்­சி­யி­லுள்ள காணிகள் அர­சாங்கத்­திற்கோ அல்­லது இரா­ணு­வத்­திற்கோ சொந்­த­மா­ன­வையல்ல. அவை மக்­களின் காணி­களாகும். யுத்தம் நடை­பெற்ற கால த்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அக்­கா­ணி­களை இரா­ணுவம் சுவீ­க­ரித்­தது. தற்­போ­தைய அமை­தி­யான நிலை யில் அந்த காணி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும். எனவே இன்னும் இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் அவற்றை மக்­களி டம் கைய­ளிப்போம். எதிர்க்கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் அந்தக் காணிகளை பார்­வை­யி­டத் தான் சென்றார். எனவே அவர் இரா­ணுவ முகா­மிற்குள் பல­வந்­த ­மாக நுழை­யவில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தின் 20ஆவது வருட பூர்த்தி விழா நேற்

றுக் காலை விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற் ­றது. அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர்

இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த காலங்­களில் நாட்டில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். அதற்­காக இந்த அமைப்பு பாரிய

அர்ப்­ப­ணிப்­பு­களை மேற்­கொண்­டுள்­ளது. தமிழ், சிங்­கள, முஸ்லிம் என சகல சமூ­கத்­தி­னரும் இணைந்து நாட்டில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­தினர். அச்­சத்தைப் போக்­கினர், அடிப்­ப­டை­வா­தத்தை நீக்­கினர். நாட்டில் வாழும் எவரும் அடிப்­ப­டை­வா­தத்தை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. அடிப்­படை வாத்­தினால் ஏனைய நாடு­களில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை கண்­டுள்ளோம். எனவே, சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­த­மாக இருக்­கலாம், தமிழ் அடிப்­ப­டை­வா­த­மாக இருக்­கலாம், முஸ்லிம் அடிப்­ப­டை­ய­வா­த­மாக இருக்­கலாம், கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வா­த­மாக இருக்­கலாம்.அதனை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

எனவே, நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நாம் அனை­வரும் இலங்­கையர் என்ற ரீதியில் ஒன்­று­பட வேண்டும். இன்று ஏற்­பட்­டுள்ள ஜன­நா­யக நிலை­யினை உறுத்­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அவ்­வி­ட­யத்தில் ஊட­கங்­க­ளுக்குப் பாரிய பொறுப்­புள்­ளது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயற்­ப­டு­வீர்கள் என நான் எதிர்­பார்க்­கின்றேன்.

எனினும் இந்தப் பய­ணத்­திற்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­வதும் ஊட­கங்­கள்தான். ஊடங்­களின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் ஜன­நா­யக ரீதி­யி­லான எதிர்­கால நட­வ­டிக்­கை­க­ளுக்கு அச்­சு­றுத்­த­த­லாக அமை­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் கிளி­நொச்­சி­யி­லுள்ள இரா­ணுவ முகா­மிற்குள் பல­வந்­த­மாக நுழைந்­த­தாக செய்­திகள் வந்த வண்­ண­முள்­ளன. அவ்­வி­வ­கா­ரத்தை பெரி­தாக்கி பிரச்­சி­னை­யாக்க சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

குறித்த சம்­ப­வத்தின் பின்னர் எதிர்க்­கட்சித் தலைவர் என்­னோடு தொடர்பு கொண்டார். அப்­போது என்னை சந்­திக்­கு­மாறு அவ­ரிடம் வேண்­டுகோள் விடுத்தேன். அதற்­கி­ணங்க அவர் என்னைச் சந்­தித்தார். 'நீங்கள் இரா­ணு­வத்தில் இணைய விரும்­பு­கி­றீர்­களா? அவ்­வா­றெனில் இரா­ணு­வத்­தி­லுள்ள உயர் பதவி வழங்­கு­வ­தாகக் குறிப்­பிட்டேன். அவ்­வாறு இரா­ணு­வத்தில் இணை­வ­தற்­கான விருப்பம் இல்­லை­யென்றால் ஏன் கிளி­நொச்­சி­யி­லுள்ள இரா­ணுவ முகா­மிற்குச் செல்ல வேண்டும் என வின­வினேன்.

'தான் கிளி­நொச்­சியில் நடை­பெற்ற கூட்டம் ஒன்­றுக்குச் சென்­ற­போதே குறித்த சம்­பவம் நடை­பெற்­றது. இரா­ணுவம் சுவீ­க­ரித்­துள்ள காணி மக்­க­ளுக்­கு­ரி­யது. அந்தக் காணி தம்­மிடம் மீளக் கைய­ளிக்­கப்­ப­டுமா என்ற சந்­தே­கத்தில் மக்கள் உள்­ளனர். அது தொடர்பில் அவர்கள் வேத­னை­யுடன் உள்­ளனர். அத­னால்தான் அங்கு சென்று அந்த காணி­யினை பார்­வை­யிட்டேன்” என அவர் என்­னிடம் குறிப்­பிட்டார்.

மேலும் அந்த சம்­பவம் தொடர்பில் இரா­ணுவத் தள­ப­தி­யி­டமும் விசா­ரித்தேன். 'எதிர்க்­கட்சித் தலைவர் இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள பக்கம் செல்­லாது காணி உள்ள பக்கம் சென்­ற­தா­கவே அவர் தெரி­வித்தார். அங்கு சென்று பார்­வை­யி­டு­வதில் பிரச்­சி­னை­யில்லை. எனினும் செல்­வ­தற்கு முன்னர் எமக்கு அறி­வித்­தி­ருந்­தி­ருக்­கலாம்' என அவர் குறிப்­பிட்டார்.

ஆனால் இன்று சில தரப்­பினர் எதிர்க்­கட்சித் தலைவர் நாட்டைப் பிரிப்­ப­தற்கு முயற்­சிப்­ப­தாகக் குறிப்­பி­டு­கின்­றனர். அவ்­வா­றில்லை, நாட்டைப் பிரிப்­பதால் அவ­ருக்கு எவ்­வித பயனும் இல்லை. ஏனெனில் அவர் இருப்­பது திரு­கோ­ண­ம­லையில். நாட்டைப் பிரித்­தாலும் அவர் எமது பிர­தே­சத்­திற்குள் வந்து விடுவார்.

எனவே, இரா­ணுவ முகா­மிற்குள் சென்ற விட­யத்தை வேறு வித­மாக பெரி­து­ப­டுத்த சிலர் முனை­கின்­றனர். இரா.சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவர். எனவே அது தொடர்பில் அவ­ரிடம் பாரா­ளு­மன்­றி­லேயே கேள்வி எழுப்­பலாம். பாரா­ளு­மன்றம் நடை­பெ­றா­த­த­னால்தான் நான் அவ­ரிடம் அது தொடர்பில் கதைத்தேன். மேலும் பாராளுமன்றம் நடைபெறும்போது அது தொடர்பில் கேள்வி எழுப்பலாம்.

மேலும் கிளிநொச்சியிலுள்ள காணி அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ சொந்தமானதல்ல. அது மக்களின் காணியாகும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அக்காணிகளை இராணுவம் சுவீகரித்தது. தற்போதைய அமைதியான நிலையில் அந்தக் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும். எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவற்றை மக்களிடம் கையளிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41