மேதினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் 

Published By: MD.Lucias

01 May, 2016 | 10:25 AM
image

உலக தொழி­லாளர் தின­மான மே தினத்தை முன்­னிட்டு ஏற்­பாடு செய்­யப்­ப டும் ஊர்­வ­லங்கள் மற்றும் மேதினக் கூட்­டங்கள் கார­ண­மாக கொழும்பு நகரின் வீதிகள் சில மூடப்­ப­ட­வுள்­ள­துடன் சில வீதிகள் ஊடான வாகனப் போக்­கு­வ­ரத்தை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்ளது.

பொலிஸ் தலை­மை­ய கம் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே யே இவ்­வாறு குறிப்­பி­டப் பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கை யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி­வரை மாளி­கா­வத்தை பிர­தே­சத்தில், பிர­தீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்­தி­யி­லி­ருந்து சங்­க­ராஜ சுற்­று­வட்டம் வரை­யான வீதி­களும் அதே­போன்று பிற்­பகல் ஒரு மணி­முதல் மாலை 6 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் தெமட்­ட­கொடை சந்­தி­யி­லி­ருந்து பொரளை சந்தி வரை­யான வீதியும் நாரா­ஹேன்­பிட்டி சந்­தி­யி­லி­ருந்து ஹைலெவல் வீதி வரை­யான பகு­தியும் மூடப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, இன்று பிற்­பகல் 2 மணி­முதல் மாலை 6 மணி­வரை ஹைலெவல் வீதி யின்

ஸ்டெஃபர்ட் வீதி சமிக்ஞை விளக்­குக்கு அரு­கி­லி­ருந்து ஹெவ்லொக் வீதி, டிக்மன் வீதியின் வீதி சமிக்ஞை விளக்கு வரை­யான பகு­தி­களும் மூடப்­ப­ட­வுள்­ளன.

இன்று பகல் 12.30 மணி­முதல் பிற்­பகல் 3 மணி­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பார்க் வீதி, பேஸ்லைன் வீதி, கரண வீதி சந்­தி­யி­லி­ருந்து பழைய வீதி, அண்­டர்சன் வீட­மைப்பு சந்தி வரை­யி­லான பகு­தி­க­ளிலும் வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, மேலும் பல வீதிகள் ஊடான வாகனப் போக்­கு­வ­ரத்தை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வழி இலக்கம் 138 இல், புறக்­கோட்டை, மஹ­ர­கம, கொட்­டாவை, ஹோமா­கம மற்றும் ஹைலெவல் வீதியின் தூர இடங்­க­ளுக்­கான சேவையில் ஈடு­படும் பஸ்­க­ளுக்­காக இன்று நண்­பகல் 12 மணி­முதல் மாற்று வீதிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அத­ன­டிப்­ப­டையில் இந்த வாக­னங்கள் தும்­முல்ல, பௌத்­தா­லோக்க மாவத்தை, கனத்தை சுற்­று­வட்டம், பேஸ்லைன் வீதி, நாரா­ஹேன்­பிட்ட, நாவல சந்தி, நுகே­கொடை, மற்றும் ஹைலெவல் வீதி­களைப் பயன்­ப­டுத்த வேண்­டு­மென அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வழி இலக்கம் 120 மற்றும் 125 இல், ஹொரண, கெஸ்­பேவ, பிலி­யந்­தலை, இங்­கி­ரிய பகு­தி­க­ளுக்­கான பஸ்கள், தும்­முல்ல, பௌத்­தா­லோக்க மாவத்தை, டூப்­ளி­கேஷன் வீதி, காலி வீதி, பெப்­பி­லி­யான ஊடாக தெஹி­வ­ளையால் பிலி­யந்­தலை வீதிக்குள் பிர­வே­சிக்க முடியும்.

மேலும்,வழி இலக்கம் 154 இல் போக்­கு­வ­ரத்தில் ஈடு­படும் கிரி­பத்­கொட – அங்­கு­லான பஸ்கள், களனி பாலம், பண்­டா­ர­நா­யக்க சுற்­று­வட்டம், ஒரு­கொ­ட­வத்த சந்தி, வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவை வீதி, ஒபே­சே­க­ர­புர, கொட்டா வீதி, காசல் வீதி, பௌத்­தா­லோக்க மாவத்தை, பம்­ப­லப்­பிட்டி மற்றும் காலி வீதியை பயன்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வழி இலக்கம் 170 மற்றும் 190 இல் பயணிக்கும் பஸ்கள், புறக்கோட்டை, செரமிக் சந்தி, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, காமினி மண்டபம், டி.பி. ஜயா மாவத்தை, இப்பன்வெல, சொய்சா சுற்றுவட்டம், வோட் பிளேஸ், பொரளை சந்தி மற்றும் கொட்டாவ வீதி என்பவற்றை மாற்று வழிகளாக பயன்படுத்த வேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53