இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி !

12 Jun, 2019 | 09:53 AM
image

(ரொபட் அன்­டனி)

ஒவ்­வொரு செவ்­வாய்க்­கி­ழ­மையும்  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் காலை 10 மணி­ய­ளவில் நடை­பெறும் அர­சாங்­கத்தின் வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம்  நேற்றைய தினம்   நடை­பெ­ற­வில்லை. பெரும்­பாலும் இன்று புதன்­கி­ழ­மையும் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­றாது என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு  மீண்டும் கூடி விசா­ர­ணை­களை நடத்­தினால் தான்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­மாட்டேன் என கடந்­த ­வாரம் ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார். 

அந்த நிலை­யி­லேயே நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில்   குறித்த தெரி­வுக்­கு­ழுவின் விசா­ரணை நடை­பெற்ற நிலையில்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்கு ஜனா­தி­பதி சமூ­க­ம­ளிக்­க­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

நேற்­றைய தினம்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி  ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன தலை­மையில்    தெரி­வுக்­கு­ழுவின் விசா­ரணை பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்­றது.இதில் காத்­தான்­குடி  சம்­மே­ள­னத்தின் பள்­ளி­வாசல் பிர­தி­நி­திகள்  நேற்­றைய தினம் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.  

இந்த  நிலையில் ஜனா­தி­ப­தியின் எதிர்ப்பை மீறி நேற்­றைய தினம்  பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு கூடி­யதன் கார­ண­மாக   ஜனா­தி­பதி நேற்­றைய தினம்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை தவிர்த்­தி­ருக்­கலாம் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த வௌ்ளிக்­கி­ழமை விசேட அமைச்­ச­ரவைக் கூட்டம் ஒன்றை நடத்­திய  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ரணை நடத்த ஆணைக்­கு­ழுவை நிய­மித்­துள்­ள­தா­கவும் எனவே தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் அவ­சி­ய­மற்­றது என்றும்   பாது­காப்பு அதி­கா­ரிகள்  தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும்     தெரி­வித்­தி­ருந்தார். 

 அதே­போன்று வௌ்ளிக்­கி­ழமை உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் கூட்­ட­மொன்றை நடத்­தி­யி­ருந்த  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன     பாது­காப்பு அதி­கா­ரிகள்   தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று கோரி­யி­ருந்தார்.  இந்த நிலையில்  தெரி­வுக்­குழு தொடர்பில் சிக்கல் நிலை தோன்­றி­யி­ருந்­த­போ­திலும் நேற்­றைய தினம்   தெரி­வுக்­குழு விசா­ர­ணைகள்  பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்­றன.  இது தொடர்பில்   அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டி­ருந்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய   தெரி­வுக்­கு­ழுவை இரத்­து­செய்ய முடி­யாது என்றும்   ஊட­கங்­க­ளுக்கு  வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­தியை மறுக்க முடி­யாது என்றும் அறி­வித்­தி­ருந்தார். 

இந்த நிலையில்   நேற்­றைய தினம்   தெரி­வுக்­குழு கூடிய சூழலில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­ற­வில்லை.   சில வேளை­களில்  செவ்­வாய்க்­கி­ழமை  அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­றா­விடின்  புதன்­கி­ழ­மை­களில் நடை­பெ­று­வது வழக்­க­மாகும். ஆனால் இன்­றைய தினம்   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சிங்­கப்பூர் செல்­ல­வி­ருப்­பதால் இன்­றைய தினமும்  அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­றாது என தெரி­கி­றது. 

இதே­வேளை  நேற்று முன்­தினம்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்­கான   முன் ஆயத்­தங்கள்  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்­றது.     அந்த ஆயத்த நட­வ­டிக்­கை­களின் பின்னர்   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க  தலை­மை­யி­லான குழு­வினர் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து  பேசவும் ஏற்பாடாகியிருந்தது. எனினும்  இறுதி நேரத்தில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  அந்த சந்திப்பை  ரத்து செய்துவிட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தவகையில்  அமைச்சரவைக் கூட்டத்தை நேற்றைய தினம் ஜனாதிபதி   தவிர்த்திருக்கின்றார் என்று தெரியவருகிறது.  இது அரசாங்கத்தின் மத்தியில் காணப்படுகின்ற நெருக்கடி நிலைமையை     தௌிவாக கோடிட்டுக்காட்டுவதாக காணப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11