உழைக்கும் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்

Published By: Raam

01 May, 2016 | 09:59 AM
image

வர்­ண­ம­ய­மான கொடிகள், ஒவ்­வொரு கட்­சிசார் பதா­கைகள், சாரா­யத்­திற்கும், 500 ரூபாய் பணத்­துக்­கு­மான மக்கள் கூட்டம், பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு என்ற வர்­ணத்­தி­லான பேர­ணிகள், ஒவ்­வொரு அர­சியல் கட்­சியின் வெற்றிக் கோஷங்­களை எழுப்­பிய வண்ணம் வீதி­களில் ஆர­வார ஊர்­வலம். என்ன தேர்தல் காலம் வந்­து­விட்­டதா என எண்­ண­வேண்டாம். வர­வி­ருப்­பது தொழி­லாளர் தினம். நாளை மே மாதம் முதலாம் திகதி இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் மேதினக் கூட்­டத்தை பற்­றிய முன்­கூட்­டிய விமர்­ச­னமே இது. பிள்­ளையார் பிடிக்­கப்போய் குரங்­கா­னது என்­ப­து­போல தொழி­லாளர் உரி­மைக்­கா­கவும் அவர்­களின் கௌர­வத்தை மதிக்கும் வகை­யிலும் நடத்­தப்­பட வேண்­டிய மேதினக் கூட்­டங்கள் இன்று வெறும் பிர­சாரக் கூட்­டங்­க­ளாக மாற்றம் பெற்­றுள்­ளது. உண்­மை­யி­லேயே மேதினம் என்­பதன் புனி­தத்­து­வமும், போராட்­டத்தின் வலியும், அதன் விளை­வு­களும் இன்று தொழி­லாளர் வர்க்­கத்­தி­ன­ருக்குக் கூட தெரி­ய­வில்லை என்று வெளிப்­ப­டி­யா­கவே குற்றம் சுமத்த முடியும்.

அன்று வர்க்­கத்­துக்­கான போராட்டம் எவ்­வாறு அமைந்­தது. உண்­மையில் போராட்டம் ஒன்று எவ்­வாறு அமைய வேண்டும் என்று வர­லா­றுகள் பல கதை­களை இன்றும் சுமந்து வரு­கின்­றது. மேற்­கு­லக நாடு­களில் தொழில் புரட்சி துளிர்­விட ஆரம்­பித்த காலம். தொழி­லாளர் வர்க்­கத்தை அடி­மை­க­ளாக்கி இரு­பத்து நான்கு மணி­நேர வேலை­ நேரம் என தொழி­லா­ளர்­களை மிரு­கத்­த­ன­மாக அடி­மைப்­ப­டுத்தி நடத்­தி­ வந்த கால­ கட்டம் அது. உற்­பத்தி திற­னுக்கு மாத்­திரம் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்டு அதற்­கான இலக்கை அடையும் வகையில் மனி­தர்­களை இயந்­தி­ர­மாக்கி மேற்­கு­லகம் நகர்ந்­து­கொண்­டி­ருந்­தது. அப்­போ­தெல்லாம் சூரி­யோ­தயம் ஆரம்­பித்து சூரிய அஸ்­த­மனம் வரையில் ஒரு தொழி­லா­ளியின் வேலை நேர­மாகும்.

இன்று ஜன­நா­யக நாடுகள் என முத்­திரை பொறித்­துள்ள நாடு­களில் எல்லாம் அன்று அடக்­கு­ முறை மூல­மாக தொழி­லா­ளரின் உழைப்பு பறி­போ­ய்க்­கொண்டு இருந்­தது. ஒரு தொழி­லாளி 19 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலும் வேலை செய்­கின்றான் என்­பதே 1800களின் பின்னர் தான் வெளிச்­சத்­துக்கு வந்­தது. இந்த கார­ணிகள் தான் மே தினம் உரு­வா­கவும் அடிப்­ப­டி­யாக அமைந்­தது. ஆனால் இந்த தொழி­லாளர் தினம் என்ற விடு­தலைக் குர­லுக்­கான நாள் அவ்­வ­ளவு இல­கு­வாக கிடைக்­க­வில்லை. இந்த வெற்­றியின் பின்­ன­ணியில் பாரிய போராட்­டங்­களும், இழப்­பு­களும் உள்­ளன. இழப்­ப­தற்கு இனி ஒன்­று­மில்லை என்ற தாரக மந்­தி­ரமே இறு­தியில் தொழி­லாளர் வர்க்­கத்தின் விடு­த­லைக்­கான உறு­தி­மொ­ழி­யா­கவும் அமைந்­தது.

18ஆம் நூற்­றாண்டில் ஆரம்­பிக்­கப்­பட்ட தொழி­லாளர் புரட்­சி­களின் விளைவு தொழி­லா­ளரின் வேலை­நேரம் 10 மணித்­தி­யா­லங்­க­ளாக குறைக்­கப்­பட வேண்டும் என்ற கோட்­பாடும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதற்­கான போராட்­டங்கள் மேற்­கு­லகில் பல பாகங்­க­ளிலும் வெடிக்க ஆரம்­பித்­தது. 1880 தொடக்கம் 1890 வரையில் அமெ­ரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடு­களில் வெடித்த இந்த போராட்­டத்தின் விளைவும், மாக்­சிஸ தலை­வர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களும் தொழி­லா­ளர்­களின் கால­வ­ரை­யின்­றி வேலை நேரத்தை 10 மணி­நேர வேலை நேர­மாக மாற்­றி­யது.

அது தொடர்ச்­சி­யான போராட்­டத்தின் மூல­மாக எட்­டு­ம­ணி­நேர வேலை­நே­ர­மாக வரை­ய­றுக்­கப்­பட்­டது. 1886 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி கண்ட வெற்­றி­யா­னது உலக தொழி­லாளர் தின­மாக மாற்றம் பெற்­றது. பின்னர் 1889ஆம் ஆண்டு பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் சர்­வ­தேச சோஷ­லிச தொழி­லாளர் பாரா­ளு­மன்றம் கூடி­யது. அதில் பதி­னெட்டு நாடு­களின் நானூறு பிர­தி­நி­திகள் இக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர். தொழி­லா­ளர்­களின் தலைவன் கார்ல் மார்க்கஸ் வலி­யு­றுத்­திய எட்டு மணி­நேர வேலை நேரம் இந்த மாநாட்டில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அதுவே மே தின­மாக இறு­தியில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

“உழைக்கும் தொழி­லா­ளர்­களே ஒன்­று­ப­டுங்கள்” என்­பதே மேதினம் அளித்த உரி­மைக்­கான முழக்­க­மாகும். அன்று தொழி­லாளர் போராட்­டங்­களின் மூல­மாக வென்­றெ­டுக்­கப்­பட்ட தொழி­லா­ளரின் தினம் அன்றில் இருந்து இன்­று­வ­ரையில் மே மாதம் முதல் நாளை உரி­மைக்­கான நாளாக உலகத் தொழி­லாளர் வர்க்­கத்­தினர் அனுஷ்­டித்து வரு­கின்­றனர். ஆனால் இன்று தொழி­லா­ளரின் நாளான மே தினம் ஒவ்­வொரு அர­சியல் கட்­சி­யி­னதும் பலத்­தையும், அதி­கார பலத்­தையும் காட்டும் நாளாக அமைந்­து­விட்­டது. உண்­மையில் தொழி­லா­ளரின் உரி­மை­களை, அவர்­களின் கடின உழைப்­பையும் அதன் மூல­மான நாட்டின் ஆற்­ற­லையும் போற்­ற­வேண்­டிய இந்த தினம் இன்று அதன் நோக்­கத்தில் இருந்து முற்­று­ மு­ழு­தாக மாற்­றப்­பட்டு ஒரு கேலிக்­கூத்­தான நாளா­கவும், அர­சியல் கட்­சி­களின் பிர­சார நாளா­கவும் மாற்றம் பெற்­றுள்­ளது. இன மத அர­சியல் பேத­மின்றி உழைக்கும் வர்க்­கத்தின் நலனை போற்­ற­வேண்­டிய இந்த நாள் இன்று முழு­மை­யாக அர­சியல் சாயம் பூசப்­பட்டு ஒரு தேர்தல் பிர­சார நாளாக மாற்றம் பெற்­றுள்­ளமை மறுக்க முடி­யாத உண்­மை­யாகும்.

எத்­த­னையோ திரு­நாட்கள் வரு­கின்­றன. ஆனால் அதி­லெல்லாம் ஒன்று கூடாத மக்கள் கூட்டம் இந்த தொழி­லாளர் தினத்தில் ஒன்­று­கூ­டு­கின்­றனர். தமது உரி­மைக்­கா­கவும் வெற்­றிக்­கா­கவும் உணர்வு பூர்­வ­மாக ஒன்று கூடு­கின்­றனர். இலங்­கையில் ஜன­நா­யகம் பல­ம­டைந்­துள்­ளது. வீதி­களில் ஊர்­வ­லங்கள் சென்றும் மைதா­னங்­களில் மேடைகள் அமைத்தும் மேதி­னத்தை அனுஷ்­டிக்க உரிமை உள்­ளது. ஆனால் அதை பயன்­ப­டுத்தி இந்த அர­சியல் நய­வஞ்­ச­கர்கள் தமக்­கே­யு­ரிய அர­சியல் தந்­தி­ரத்தில் இன்று வெறும் அர­சியல் நாளாக மாற்­றி­விட்­டனர். அதன் விளைவு இன்று தொழி­லாளர் உரி­மைக்­கான மேடைகள் வெறும் அர­சியல் மேடை­யாக மாத்­திரம் மாற்றம் பெற்­றுள்­ளன.

எத்­த­னையோ தொழி­லா­ளர்கள் தமது வேலைக்­கேற்ற சரி­யான ஊதியம் இல்­லாது, உரி­மைகள் மறுக்­கப்­பட்டு உள்­ளனர். வாக்­கு­று­திகள் மீறப்­பட்டு மோச­மான வகையில் நடத்­தப்­ப­டு­கின்­றனர். ஆனால் ஆட்சி மாற்­றத்தின் போதும் அதி­கா­ரத்தை கைப்­பற்றும் போதும் அர­சியல் வாதி­களின் வாக்­கு­று­தி­களை நம்பி வாக்­க­ளித்­தாலும் ஒவ்­வொரு மேதினக் கூட்­டத்­திலும் தொழி­லா­ளர்கள் தமது உரி­மைக்­கா­கவும் ஊதி­யத்­திற்­கா­கவும் மாத்­தி­ரமே குர­லெ­ழுப்பி வரு­கின்­றனர். அதேபோல் நாட்டில் எத்­த­னையோ சிறுவர் தொழி­லா­ளர்கள் உள்­ளனர். ஆனால் அவர்­களின் எதிர்­காலம் தொடர்பில் எந்த அர­சியல் வாதி­களும் குர­லெ­ழுப்­பு­வ­தில்லை. ஒரு­வேளை அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் வயது வரா­த­தனால் வாய்­மூடி உள்­ள­னரோ? என்றும் விமர்­சிக்கத் தோன்­று­கின்­றது. மேதி­னத்தின் நோக்­கத்­தையோ அல்­லது அதன் உண்மைத் தாற்­ப­ரி­யத்­தையோ குழி­தோண்டிப் புதைத்­து­விட்டு அதன் மேல் நின்று ஒப்­பாரி வைப்­ப­தைப்போல் இன்­றைய காலத்தின் மேதினம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. தொழி­லாளர் வர்க்­கமே ஒன்­று­படு, தொழி­லா­ளரின் உரி­மை­களை வென்­றெடு என்­றெல்லாம் குர­லெ­ழுப்ப வேண்­டிய இத்­தி­னத்தில் அதை மறந்­து­விட்டு மாறாக அர­சியல் கட்­சி­களின் கொள்­கை­க­ளையும், தமது அருமை பெரு­மை­க­ளையும், தனிப்­பட்ட ஒரு­சிலர் மீது விமர்­சனம் முன்­வைத்தும் தமது அர­சியல் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர்.

இலங்­கையில் கடந்த காலங்­களில் நடை­பெற்ற அர­சியல் கட்­சி­களின் மே தினங்­களைப் போலில்­லாது இம்­முறை முற்­றிலும் மாறு­பட்ட ஒன்­றாக அமையும் என்ற எதிர்­பார்ப்பு உள்­ளது. கடந்த காலங்­களில் ஒரு கட்­சியின் மீதும் குடும்ப அர­சி­யலின் மீதும் முற்­றிலும் குறை கூறப்­பட்ட ஒன்­றா­கவும், தொழி­லாளர் உரி­மைகள் பறிக்­கப்­பட்­டதும், சாதா­ரண மக்­களின் வாழ்­வா­தாரம் பறி­போன ஒன்­றா­கவும் விமர்­சிக்­கப்­படும் ஒன்­றா­கவும் அமைந்­தது. ஆனால் இம்­முறை அவ்­வாறு இல்­லாது கூட்டு கட்­சி­களின் ஆட்­சியில் தொடர்ந்து கொண்­டி­ருக்கும் தொழி­லாளர் உரிமை மீறல்கள், பொய்­யான வாக்­கு­று­திகள் தொடர்­பிலும் விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் ஒன்­றாக அமையும்.

வழ­மை­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆதார பூர்­வ­மான குற்­ற­சாட்­டுகள். மஹிந்த அணி­யி­னரின் பயங்­க­ர­வாத மற்றும் இன­வாத குற்­றச்­சாட்­டுகள். ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் நல்­லாட்சி, ஜன­நா­யகம், மஹிந்­தவின் ஊழல்கள், விடு­பட்ட சர்­வ­தேச விசா­ர­ணைகள் என்ற கதை­களும் மாத்­தி­ரமே மே தினக் கூட்ட மேடை­களில் காணப்­படும் என்­பதில் சந்­தேகம் இல்லை. எனினும் அதையும் தாண்­டிய உண்­மை­யான தொழி­லா­ளரின் உரி­மைக்­கான குரல்கள் கட்­டாயம் தேவைப்­ப­டு­கின்­றது. இன்­றைய நவீன பொரு­ளா­தார சுரண்டல், தொடர்ச்­சி­யான தொழி­லாளர் வர்க்­கத்தின் மீதான அடக்­கு­மு­றைகள், வேலை­வாய்ப்பு இல்­லாத சமூகத்தின் மீதான அழுத்தம் என பல சிக்­கல்கள் உள்­ளன. அதேபோல் மலை­யக தொழி­லா­ளர்­களின் மீதான அடக்­கு­மு­றைகள், புறக்­க­ணிப்­புகள், தோட்டத் தொழி­லா­ளர்­களின் வேலைக்­கேற்ற ஊதியம் இல்­லாத நிலைமை, தேயி­லைத்­தோட்ட தொழி­லா­ளர்­களின் மீதான பொரு­ளா­தார சுமைகள், நீண்ட நேர தொழில் என்று பல்­வேறு சிக்­கல்கள் எம்­மத்­தியில் உள்­ளன. வெறும் அர­சியல் வாக்­கு­று­தி­களில் மாத்­திரம் நம்பி ஏமாறும் மக்­களை தூண்டும் வகை­யிலோ அல்­லது தொழி­லாளர் வர்க்­கத்தை மீண்டும் ஒன்­றி­ணைக்கும் வகை­யிலோ பல­மான வேலைத்­திட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும்.

19 ஆம் நூற்­றாண்டில் தொழி­லாளர் வர்க்­கத்தின் தலை­மைத்­து­வத்தை ஏற்ற மார்க்ஸ், ஏங்கில்ஸ், லெனின், திரோஸ்கி ஆகி­யோரைப் போன்று இப்­போதும் பல உழைக்கும் வர்க்­கத்தின் தலை­மைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். எமது நாட்டில் வேலை­யாட்­களின் பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்டும் அவர்­க­ளுக்­கென பல­மாக குரல்­கொ­டுக்கும் அமைப்­புகள் புத்­துயிர் பெற­வேண்டும். ஆடு நனை­கின்­றது என்று அழும் ஓநாய்­க­ளான அரசியல் வாதிகளிடம் இருந்து உழைக்கும் வர்க்கத்தை காப்பாற்றவும் அவர்களுக்கு என்ற உரிமைகளையும் சலுகைகளையும் ஆணித்தனமாக உறுதிப்படுத்தும் போராட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது இப்போது மீண்டுமொரு தொழிலாளர் புரட்சி தேவைப்படுகின்றது.

வழை­மை­போன்று மே தினத்தில் தொழி­லா­ளர்­களின் உரி­மை­கள் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும். தொழி­லாளர் வர்க்­கத்தின் உரி­மைக்­குரல் முழங்க வேண்டும். அது தவிர்ந்து அர­சியல் வாதி­களின் அல்­லது கட்­சி­களின் புகழ்­பாடும் கூட்­ட­மாக அமைந்­து­விடக் கூடாது. தொழி­லாளர் தினத்தில் தொழி­லா­ளர்கள் போற்­றப்­பட வேண்டும், அது தவிர அர­சி­யல்­வா­தி­களை அல்ல. அப்­போது தான் உண்­மை­யான மே தினத்­திற்கும் புத்­துயிர் கிடைக்கும். ஆகவே இப்­போ­தா­வது நவீன பொரு­ளா­தார முறை­மை­களில் மேற்­கத்­தேய நாடு­களின் பொரு­ளா­தார சுரண்­டல்கள், எமது தொழி­லாளர் வள­மிக்க நாடு­களில் எவ்­வாறு தொழி­லாளர் உரி­மைகள் பறி­போ­கின்­றது என்­பதை அனை­வரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21