நான் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்

Published By: Raam

30 Apr, 2016 | 06:23 PM
image

நடை­பெ­ற­வுள்ள தமி­ழக சட்­டப்­பே­ரவை தேர்­தலில் நான் வாக்­க­ளிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்­ஹாசன் கூறி­யி­ருப்­பது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

நடிகர் கமல்­ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, சென்­னையில் நேற்று நடை­பெற்­றது. இதன்­போது செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய கமல்­ஹாசன், எனது சபாஷ் நாயுடு படப்­பி­டிப்பு, மே 16 ஆம் திகதி தொடங்­கு­கி­றது. அதனால் படப்­பி­டிப்­புக்கு போய்­வி­டுவேன்.

இந்த சட்­ட­மன்ற தேர்­தலில் நான் வாக்­க­ளிக்க மாட்டேன். ஏனென் றால், சென்ற பாரா­ளு­மன்ற தேர்­தலில் வாக்குச் சாவ­டிக்கு போன­போது என் வாக்­கினை வேறு யாரோ போட்­டு­விட்டு சென்­றனர். இந்த முறை வாக்­க­ளிப்­ப­தற்­காக கேட்டேன். வாக்­காளர் பட்­டி­யலில் என் பெயரே இல்லை என்று சொல்­லி­விட்­டார்கள். இத்­த­னைக்கும் தேர்தல் ஆணை­யாளர் அதி­காரி என் நெருங்­கிய நண்பர். இருந்தும் என்ன செய்­வது?" என்று கண்­சி­வந்தார்.

இதைத் தொடர்ந்து அவ­ரிடம் கேட்ட கேள்­வி­களும், அதற்கு அவர் அளித்த பதில்­களும் வரு­மாறு:

உங்கள் ரசி­கர்­களை எந்த கட்­சிக்கு வாக்­க­ளிக்க சொல்­வீர்கள்?

முதலில் என் ரசிகன் எனது அலு­வ­ல­கத்­திற்கு வரும்­போது, செருப்பை கழற்றி வாசலில் விட்­டு­விட்டு வரச்­சொல்­லுவேன். அது­போல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்­டிக்­கொண்டு செல் என்று சொல்­லுவேன். அதற்­காக நான் செருப்பு என்று சொன்­னதை தவ­றான உவ­மை­யாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்­னிடம் அர­சியல் கொண்டுவர வேண்டாம். என்­னு­டைய நற்­பணி இயக்­கங்­க­ளுடன் சேர்ந்து தொண்டு செய்­வதே போதும்.

நீங்கள் சிவாஜி வாரிசு என்று சொல்­கி­றீர்கள். அவ­ரு­டைய வாக்­கையே வேறு ஒருவர் போட்டு விட்­டாரே?

பதில் அளிக்­காமல் சிரித்தார்

சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்­துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்­கி­றீர்கள்?

முதலில், நீங்கள் வசிக்­கிற தெருவில் இருக்­கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்­புறம் பார்க்­கலாம். உங்­க­ளுக்கு எப்­படி ஒரு பாத்­திரம் பிடிக்­குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்­தி­ருக்­கி­றது. அதனால் இந்த தலைப்பை வைத்­தி­ருக்­கிறேன்.

நீங்­களும், ரஜி­னியும் கலந்து கொண்ட நட்­சத்­திர கிரிக்­கெட்­டுக்கு விஜய்யும், அஜித்தும் வர­வில்­லையே ஏன்?

தயவு செய்து இந்த விட­யத்தை அர­சியல் ஆக்­கா­தீர்கள். நடிகர் சங்கம் எல்­லோ­ருக்கும் பொதுவானது. நடிகர் சங்கத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. விஜய், அஜித் விடயம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சுமுகமாக பேசி முடிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21