இரு பிள்ளைகளின் தாயை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய முதியவர் ; மறுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்

Published By: Digital Desk 4

11 Jun, 2019 | 02:35 PM
image

சூரியவெவ - பெத்தேவெவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய நபரொருவர் குறித்த பெண்ணை பல தடவைகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டுக்கு நேற்று  சென்று மீண்டும் திருமண யோசனையை முன்வைத்துள்ளார்.

இதற்கு குறித்த பெண் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, பெண் குறித்த முதியவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமுற்ற மேற்படி நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதையத்து  கொலையை செய்த குறித்த நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகநபரின் வீட்டை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11