குடிநீரின்றி அவதிப்படும் மண்டானை கிராம மக்கள்!

Published By: Vishnu

11 Jun, 2019 | 10:36 AM
image

திருக்­கோவில் பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட மண்­டானைக் கிரா­மத்தில் வசித்து வரும் மக்கள் குடிநீர் வச­தி­யின்றி பல்­வே­று­பட்ட இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

சுனாமி அனர்த்­தத்­தின்­போது வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்­டத்தின் திருக்­கோவில் பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட தம்­பி­லுவில், திருக்­கோவில்,  தம்­பட்டை, விநா­ய­க­புரம் போன்ற பகு­தி­களில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட மக்­களை ஒன்­றி­ணைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் உரு­வாக்­கப்­பட்ட மீள்­கு­டி­யேற்றக் கிரா­மம்தான் மண்­டானைக் கிராமம் ஆகும்.

திருக்­கோவில் நக­ரி­லி­ருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தொலைவில் எல்லைப் புற­மாக அமையப் பெற்­றுள்ள இக்­கி­ரா­மத்தில் சுமார் 400 குடும்­பங்­களைச் சேர்ந்த 1400 மக்கள் தொகை­யினர் இங்கு வாழ்ந்து வரு­கின்­றனர். இப்­பி­ர­தே­சத்தில் மீள் குடி­ய­மர்த்­தப்­பட்ட மக்கள் அடிப்­படை வச­திகள் பல­வற்றைப் பெற்றுக் கொள்­வதில் பாரிய சிக்­கல்­களை எதிர்­நோக்கி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் வரட்­சி­யு­ட­னான கால­நிலை நிலவி வரும் இக்­காலப் பகு­தியில் இக்­கி­ரா­மத்தில் உள்ள நீரேந்து பிர­தே­சங்கள் வற்றி வரண்டு காணப்­ப­டு­கின்­றன. கிண­றுகள், கால்­வாய்கள் மற்றும் குளங்கள் போன்­ற­வற்றின் நீர்­மட்டம் வெகு­வாகக் குறைந்து குடி­நீரைப் பெற்றுக் கொள்ள முடி­யாத நிலையில் அப்­ப­குதி மக்கள் உள்­ளனர். நீர்த்­தட்­டுப்­பாடு கார­ண­மாக இங்­குள்ள மக்­களில் பெருந் தொகை­யானோர் தூரப் பிர­தே­சத்தில் உள்ள தமது உற­வி­னர்­களின் இல்­லங்­களில் தஞ்­ச­ம­டைந்தும் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இவ்­வீ­ட­மைப்புத் திட்டம் உரு­வாக்­கப்­பட்­ட­தனைத் தொடர்ந்து கடந்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மூலம் இப்­ப­கு­தியில் விஷேட நீர் விநி­யோ­கத்­திட்ட அலு­வ­லகம் ஒன்று திறக்­கப்­பட்டு, சாகாமம் குளத்­தி­லி­ருந்து நீரைப் பெற்று இப்­ப­குதி மக்­க­ளுக்­காக குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வந்­தன. இருந்தபோதிலும் சாகாமம் குளத்தின் நீர் மட்டம் குறை­வ­டை­கின்­ற­போது இக்­கு­டிநீர் விநி­யோகத் திட்டம் இடை நிறுத்­தப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

திருக்­கோவில் பிர­தே­சத்தில் மிக உயரம் கொண்ட பகு­தி­யாக மண்­டானைப் பிர­தேசம் காணப்­ப­டு­கின்­றது. இதனால் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மூலம் நிறு­வப்­பட்ட குடிநீர்த் திட்­டத்தின் மூலம் வழங்­கப்­படும் குடிநீர் விநி­யோ­கமா­னது சாதா­ரண காலத்தில் கூட உயர்ந்த பிர­தே­சத்தில் வசித்து வரும் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தில்லை என இம்­மக்கள் தெரி­விக்­கின்­றனர். 

இப்­ப­குதி மக்­களின் குடிநீர்த் தட்­டுப்­பாட்­டினை தற்­கா­லி­க­மாக நிவர்த்தி செய்யும் பொருட்டு திருக்­கோவில் பிர­தேச சபை, திருக்­கோவில் பிர­தேச செய­லகம் ஆகி­ய­வற்றால் நீர்க் கொள்­க­லன்கள் மூலம்  வாரத்­திற்கு இரண்­டொரு தட­வைகள் நீர் கொண்டு செல்­லப்­பட்டு அம்­மக்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­தோடு தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபையின் மூலம் வாரத்தின் வெள்­ளிக்­கி­ழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்­துக்கு மாத்­திரம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபை மூலம் குறிப்­பிட்ட நேரத்­திற்கு மாத்­திரம் விநி­யோ­கிக்­கப்­படும் நீர் தாழ்ந்த பிர­தே­சத்­துக்கு மாத்­தி­ரமே செல்­வ­தா­கவும் உயர் நிலப் பிர­தே­சங்­க­ளுக்கு இந்நீர் வரு­வ­தில்லை எனவும் பிர­தேச மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

நீர்த் தட்­டுப்­பாட்­டினை பல தரப்­பி­ன­ரிடம் முறை­யிட்டும் தமக்கு நிரந்­தரத் தீர்­வேதும் கிட்­டாத கார­ணத்­தினால் இப்­ப­கு­தியில் உள்ள மக்கள் தமது நிலங்­களில் கிண­று­களை வெட்டி நீரைப் பெற்றுக் கொள்­ளலாம் என்ற நப்­பா­சை­யுடன் கிணறு தோண்­டு­கின்­ற­போது, கிணறு தோண்டி பூதம் வெளி­யான கதைபோல் பல அடி ஆழத்­திற்­கப்பால் தோண்டிக் கொண்டு செல்­கின்­ற­போது நீர் வெளி­வ­ரு­வ­தற்குப் பதி­லாக பாரிய கல் மலைகள் வெளி­யா­வது கண்டு இம்­மக்கள் மிகுந்த கவ­லை­ய­டைந்­துள்­ளனர். கிறவல் நில­மான இப்­ப­கு­தியில் கிண­றொன்றைத் தோண்­டு­வற்கு பல்­லா­யிரம் ரூபா பணம் தேவைப்­ப­டு­கின்­றது. 

நாளாந்தக் கூலித் தொழிலை நம்பி ஜீவ­னோ­பா­யத்­தினைக் கடத்தி வரும் இம்­மக்கள் கிணறு தோண்­டு­கின்­ற­போது வெளி­யாகும் மலை­களை உடைப்­ப­தற்கு போதிய வளமும் நிதியும் இல்­லா­ததால், கிணறு தோண்டும் தமது முயற்­சி­களை இடை­ந­டுவில் கைவி­டு­கின்­றனர்.

எது எவ்­வா­றாக அமைந்த போதிலும், தமக்கு வழங்­கப்­ப­டு­கின்ற நீர் நாளாந்தம் குடிப்­ப­தற்கு போது­மா­ன­தாக அமை­ய­வில்லை என இப்­பி­ர­தேச மக்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர். 

விவ­சாயச் செய்கை, மற்றும் கூலித் தொழில் ஆகி­ய­வற்­றினை நம்பி தமது ஜீவ­னோ­பா­யத்­தினைக் கடத்தி வரும் இம்­மக்கள் தமது கால்­ந­டைகளுக்கு  பல கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று நீரைப் பெற்றுக் கொடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் வரட்சி கார­ணமாக தமது கால்­ந­டைகள் இறந்து வரு­வ­தா­கவும் இம்­மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இப்­பி­ர­தேச மக்கள் தமது நீர்த் தேவை­யினை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுமார் 40 அடிக்கு மேல் கிண­று­களைத் தோண்­டு­கின்ற போதிலும் நீரைப் பெற்றுக் கொள்ள முடி­யாத வரட்சி இப்­பி­ர­தே­சத்தில் நில­வு­வ­தாக மக்கள் குறி­பிப்­பி­டு­கின்­றனர். அது­மாத்­தி­ர­மல்­லாமல் தற்­கால வரட்சி கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் செய்கை பண்­ணப்­பட்ட மேட்டு நிலப் பயிர்­க­ளுக்கு பல்­வேறு நோய்த் தாக்­கங்­களும் பீடித்­துள்­ளன. இதனால் பயிர்ச் செய்­கைக்­காக செலவு செய்த பெருந்­தொ­கை­யான பணத் தொகையும் வீண­டைந்­துள்­ள­தாக மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

நாட்டில் நிலவும் வரட்­சி­யு­ட­னான கால­நிலை இம்­மக்­களின் வாழ்க்­கை­யினை வெகு­வாகப் பாதித்­தி­ருக்­கி­ற­தென்றே கூற­வேண்­டி­யுள்­ளது. நீர்த் தட்­டுப்­பாடு நில­வு­வதால் தமது விவ­சாயச் செய்கை வெகு­வாகப் பாதிப்­ப­டைந்­துள்­ள­துடன் தமது ஜீவ­னோ­பா­யமும் கேள்விக்குறியாகி வருகின்றது என அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இம்மக்களின் குடிநீர்க் குறைபாட்டினை நிவர்த்திக்க வேண்டும் என்ற முனைப்புடன் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் ஆர்.டபிள்யு. கமலராஜன் தமது நேரடிக் கண்காணிப்பின் கீழ் இப்பிரதேசத்துக்கு நீர் பவுசர்களைக் கொண்டு சென்று குடிநீரை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகின்றது. தமது அடிப்படைத் தேவையான குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கோருகின்ற இம்மக்கள் குடிநீருக்கான நிரந்தரத் தீர்வினையும் பெற்றுத்தருவதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50