விபத்தில் விமானப்படை வீரர் பலி 

Published By: Vishnu

10 Jun, 2019 | 07:58 PM
image

(ஆர்.விதுஷா)

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார். 

மாரவில - கடுநேரிய பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக மாரவில  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

புத்தளத்திலிருந்து பேலியகொடை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்டபோது முச்சக்கர வண்டியுடன்  மோதுண்டதையடுத்து எதிர்பாராத விதமாக எதிர் திசையில்  பயணித்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய வர்ணகுலசூரிய டிரோன் சேதில் திசர பெர்னாந்து எனப்படும்  விமானப்படை உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாரவில  வைத்தியசாலையின் பிரேத  அறையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் முச்சக்கரவண்டி  சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15