சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பிணையில் விடுதலை

Published By: Digital Desk 4

10 Jun, 2019 | 03:50 PM
image

சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக்கிளை தலைவர், செயலாளர் மற்றும் விரிவுரையாளர் ஆகிய மூவரையும் பதினைந்து இலட்ச சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக்கிளை தலைவர், செயலாளர் மற்றும் விரிவுரையாளர் ஆகிய மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட. நிலையில் அதை ஏற்றுக் கொண்ட  நீதிபதி குறித்த மூவரையும் பதினைந்து இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்தார். 

அத்துடன் நீதிபதி அவர்கள் மூவரையும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு உத்தரவிட்டார்.

பதுளை நீதவான் நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் இன்று பகல்  மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக் கிளையின் தலைவர் மொகமது உசேயின் அக்கலாம், அமைப்பின் செயலாளர் சாகுல் ஹமீட் மொகமத் நிசாம்,  அமைப்பின் விரிவுரையாளர் சுலைமான் சிராஜ் ஹலி யெகியா ஆகிய மூவரும்  தலா ஐந்து இலட்ச சரீரப்பிணை என்ற அடிப்படையில் 15 இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்.

சந்தேக நபர்கள் மூவரும் சிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், இவ் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. ஆனால், தேசிய தௌஹித் அமைப்பே தடைசெய்யப்பட்டிருப்பதாகும். இவ் அமைப்பை இம்மூவரும் சார்ந்தவர்களல்ல. அத்துடன்  இம்மூவரும் கைது செய்யப்பட்டதிலிருந்து இது வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளில்  இவர்கள் பயங்கரவாத குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாகக் காணப்படவில்லையென்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆகையினால் இவர்களுக்குப் பிணை வழங்கும்படி சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இக் கோரிக்கையினை நீதிமன்றத்தில் ஆஜரான பொலிசாரும் ஆட்சேபிக்கவில்லை. சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளது. அதன் அறிக்கைகளும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. எது எப்படியிருந்த போதிலும் சந்தேக நபர்களைப் பிணையில் விடுவதற்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென்று பொலிசார் நீதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இவற்றினை கருத்திற்கொண்ட நீதிபதி சமிந்த கருணாதாச மேற்குறிப்பிட்ட;ட மூவரையும் சரீரப் பிணையில் விடுவித்ததுடன் ஒகஸ்ட் மாதம் 09ம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04