ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

10 Jun, 2019 | 11:18 AM
image

சீனாவிடம் ஹொங்கொங் கைதிகளை ஒப்படைப்பது தொடர்பாக கொண்டு வரப்படும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் பெருந்திரளாக வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997-ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹொங்கொங்கில் குற்றச்செயல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஹொங்கொங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹொங்கொங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12-ம் திகதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.

இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் பலத்த குறைபாடுள்ள நீதி அமைப்பின்கீழ் ஹொங்கொங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹொங்கொங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் கெட்டுப்போகும் என்கின்றனர்.

இந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2014 ல் நடந்த குடை போராட்டத்திற்கு பின்னர் இந்த வெள்ளை சீருடை போராட்டம் பெரும் மக்களை திரட்டியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

சீனாவில் நேரடி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வரும் ஹொங்கொங் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியாகும். ஹொங்கொங்கில் குற்றச்செயல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்துவதுடன் வழக்கு விசாரணையை சந்திக்க கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனை வெளிக்கொணரும் விதமாக பெரும் போராட்டம் நடந்தது. இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய பேரணியில் ஹொங்கொங் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என 10 லட்சம் பேர் திரண்டனர்.

பலரும் மஞ்சள் குடை ஏந்தியும், வெள்ளை சீருடை அணிந்தும் பங்கேற்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07