வெள்ளை மாளிகையில் மடிந்துபோன பிரான்ஸ் - அமெரிக்க நட்பு மரம்

Published By: R. Kalaichelvan

10 Jun, 2019 | 10:51 AM
image

அமெ­ரிக்­கா – பிரான்ஸ் நாடு­க­ளுக்கு இடை­யி­லான 250 ஆண்­டு­கால நட்­பு­றவை கொண்­டாடும் வகையில் பிரான்ஸ் ஜனா­தி­பதி இமானுவேல் மேக்ரான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வொஷிங்டன் நக­ருக்கு வந்­தி­ருந்தார்.

 அப்­போது இரு­நா­டு­க­ளுக்கு இடை­யி­லான வலி­மை­யான நட்பை நினைவு­கூரும் வித­மாக வெள்ளை மாளி­கையின் தெற்கு பகு­தியில் டொனால்ட் ட்ரம்ப்  மற்றும் இமா­னுவேல் மேக்ரான் ஆகியோர் ஒன்­றாக இணைந்து ஒரு கரு­வாலி மரக்­கன்றை  நட்­டனர். 

அமெ­ரிக்­கா – பிரான்ஸ் நட்பு மரம்’ Oak of friendship என்று அழைக்­கப்­பட்ட இந்த மரம் நடுகை­விழா அப்­போது உலக ஊட­கங்­களில் மிக முக்­கிய செய்­தி­யாக வெளி­யா­னது. இந்­நி­லையில் இந்த நட்பு மரம் பட்­டுப்போய் செத்து விட்­ட­தாக அமெ­ரிக்க ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இதற்கு வெள்ளை மாளிகை அதி­கா­ரி­களின் மித­மிஞ்­சிய கட்­டுப்­பா­டுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்­பட்ட இந்த மரக்­கன்­றினால் ஜனா­தி­ப­தியின் வெள்ளை மாளிகை தோட்­டத்தில் உள்ள மற்ற செடி வகை­க­ளுக்கு எந்த பாதிப்பும் உண்­டாகக் கூடாது என்ற நோக்­கத்தில்  நட்பு மரத்தின் மீது அதி­கா­ரிகள் சில தெளிப்­பான்­களை தொடர்ந்து பயன்­ப­டுத்­தி­யதால் அந்த மரம் இறந்து விட்­ட­தாக சில செய்­திகள் குறிப்­பி­டு­கின்­றன. முதலாம் உல­கப்­போ­ரின்­போது பிரான்ஸ் நாட்டில் உயிர்­நீத்த அமெ­ரிக்க வீரர்­களின் கல்­லறை அமைந்­துள்ள இடத்திலிருந்து சுமார் 6 அடி உய­ரம்­கொண்ட இந்த கரு­வாலி மரக்­கன்று அமெ­ரிக்­கா­வுக்கு முன்னர் கொண்டு வரப்­பட்­டது. கடந்த ஆண்டில் இந்த மரக்­கன்று நாட்டப்­பட்ட ஒரு வாரத்தில் காணாமல் போனதும், பின்னர் மிக உயரிய நினை­வுப்­ப­ரிசு என்­பதால் பாது­காப்­பாக வளர்ப்பதற்காக வேறு இடத்துக்கு ‘நட்பு மரம்’ கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்ததும் நினைவிருக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47