கற்பனைக்கு எட்டாத புது முயற்சி!

Published By: R. Kalaichelvan

10 Jun, 2019 | 10:28 AM
image

பலூன் போல் விரிந்து சுருங்கும் நவீன ஆடை­களை ஆடை வடி­வ­மைப்­பாளர் ஒருவர் வடி­வ­மைத்து ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

'பப்ளி கலெக்‌ஷன்ஸ்' என்று இது அழைக்­கப்­ப­டு­கின்­றது. நோர்­வே­யை  சேர்ந்த பிரட்ரிக் டஜி­ரண்ட்சென் என்னும் ஆடை வடி­வ­மைப்­பா­ளரே யாருமே இது­வரை யோசிக்­காத மற்றும் முயற்சி செய்­யாத ஒரு வடி­வ­மைப்பை செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

 லண்­டனில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் மிகப்­பெ­ரிய பலூன் பந்­து­க­ளுக்குள் மொடல்கள் அணி­வ­குத்து வந்­தனர். என்ன இது விசித்­தி­ர­மான உடை­யாக உள்­ளதே. 

இதை எப்­படி தெருக்­களில் அணிந்து நடக்க முடியும் என பார்­வை­யா­ளர்கள் விமர்­சித்துக் கொண்டே பார்த்­துள்­ளனர். பின் அடுத்த நொடி­யி­லேயே அந்த பலூன் காற்று வெளி­யேற்­றப்­பட்டு அதை அப்­ப­டியே ஆடை­யாக மாற்றிக் கொண்­டனர். இவ்­வ­ளவு நேரம் காற்றில் மிதந்த பலூன் எப்­படி ஆடை­யா­னது என அனை­வ­ருக்கும் ஆச்­ச­ரியம். இதுதான் அவரின் சாதனை. அவரின் கற்­ப­னைக்குக் கிடைத்த வெற்றி.

இந்த ஆடையை முழுக்க முழுக்க இறப்பர் கொண்டு வடி­வ­மைத்­துள்ளார். இந்த இறப்­பரை இலங்­கை­யி­லி­ருந்து வாங்­கி­யி­ருப்­ப­துதான் கூடுதல் சிறப்பு.

 “இந்த ஆடைகள் தனித்­தனி ஆடைகள் அல்ல. ஒரே, இறப்­பரில் செய்­யப்­பட்ட முழு ஆடை.  இந்த ஆடை காற்றின் அழுத்­தத்தால் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை அணிந்­தி­ருப்போர் தலை கீழ் பலூ­னினுள் இருக்கும் காற்றை திறந்து விட்டால் சாதாரண உடையாக மாறிவிடும் என வடிவமைப்பாளர்  பிரட்ரிக் டஜிரண்ட்சென் கூறியுள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right