சீதுவை - தடுகங் ஓயாவில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மதியம் 5 இளைஞர்கள் தடுகங் ஓயாவில் குளிக்கச் சென்றுள்ளனர்.இதன் போது  இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

தற்போது காணாமல் போன இளைஞர்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.