10 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் தோண்டி எடுப்பு

Published By: R. Kalaichelvan

10 Jun, 2019 | 09:28 AM
image

 2008 ம் ஆண்டு  ஆயுத குழு ஓன்றினால் சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் நாளை பரிசோதனைக்கு தோண்டி எடுப்பு.

மட்டக்களப்பில்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது  அதேவேளை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை நாளை 11ம் திகதி தோண்டி எடுத்து இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்ப உள்ளதாக சிஜடி யினர் தெரிவித்தனர்.

கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போயிருந்தாh.; 

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக சிஜடி யினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில்  கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான  மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன்,  மதன், என்றழைக்கப்படும்  தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம்   ஆகிய 3 பேரை  சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி,போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் சி.ஜ.டி யினர் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற் கொணட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக சி.ஜ.டி ளினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சி.ஜ.டி பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை 23 ஆம் திகதி அனுமதிகோரியிருந்தார். 

இதனையடுத்து சடலத்தை எதிர்வரும் 11 திகதி நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதவான் அனுமதிவழங்கியுள்ளார் 

இதன் பிரகாரம் நாளை 11 ம் திகதி குறித்த மயானத்தில் சடலத்தை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக  சி.டி.யினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51