நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த   13 பேரும் பலியானார்கள்.

நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற   இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர்  தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதி பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.