முல்லேரியா பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த துப்பாக்கிச் சூட்டை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இத்துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளாகிய குறித்த நபர் முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபர் கிரிபத்கொடை, மாகோல, தேவாலய வீதி பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய என இனங்காணப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.