7 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்து வெற்றி!

Published By: Vishnu

09 Jun, 2019 | 10:24 AM
image

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை  6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டத்தையும், ஹஷ்மத்துல்லா ஷஹிதி 59 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றதுடன் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணிசார்பில் ஜேம்ஸ் நிஷம் 5 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் 4 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

173 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

நியூஸிலாந்து அணிசார்பில் கொலின் முன்ரோ 22 ஓட்டத்தையும், கேன் வில்லியம்சன் 79 ஓட்டத்தையும், ரோஷ் டெய்லர் 48 ஓட்டத்தையும், டொம் லெதம் 13  ஓட்டத்தையும் பெற்றனர். 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணிசார்பில் அப்தாப் ஆலம் மாத்திரம் மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

Photo credit : ‍ICC 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22