சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்

Published By: Digital Desk 3

08 Jun, 2019 | 02:49 PM
image

திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி  அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். 

எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம்  என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லா தெரி­வித்தார். 

இஸ்­லாத்தில் அடிப்­ப­டை­வாதம் என்று ஒன்­றில்லை. அதே போன்று தௌஹீத்தை மறுத்தால் அவன் முஸ்­லிமே இல்ைல. ஆகவே ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் தௌஹீத்கள் தான். எனவே தவ­றான புரி­தல்­களை சீர் செய்ய வேண்­டி­ய­ுள்­ளது என வும் அவர் குறிப்­பிட்டார். 

வீர­கே­சரி நாளி­த­ழுக்கு எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லாஹ் வழங்­கிய பிரத்­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அந்த செவ்வி பின்­வ­ரு­மாறு, 

கேள்வி: உங்­க­ளது பதவி விலகல் குறித்து தெளிவு­ப­டுத்த முடி­யுமா? சுய­மாக வில­கி­னீர்­களா? அல்­லது விலக்­கப்­பட்­டீர்­களா? 

பதில்: நாங்கள் விலகினோம். ஆனால் உண்­மை­யா­கவே விலக்­கப்­பட்டோம். பதவியை விட்டு விலகும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. நாட­ளா­விய ரீதியில் முஸ் லிம் மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. பெற்றோல் வாங்கி முஸ்­லிம்­களை தாக்­கு­வ­தற்கு தயா­ரா­வ­தாகத் தொலை­பேசி அழைப்­புகள் மூலம் தக­வல்கள் கிடைத்­தன. கடும்­போக்­கான சிங்­க­ள­வர்கள் வெலி­கம, கண்டி, குரு­நாகல், அம்­பந்­தோட்டை, காலி ஆகிய பகு­தி­களில் முஸ்லிம் கடை­களை மூடு­மாறு அச்­சு­றுத்தி தாக்­கி­யுள்­ளனர். 

வீடு­க­ளுக்குச் சென்று அச்­சு­றுத்­தினர். மறுநாள் 12 மணிக்கு கொலை செய்வோம் என்று கடு­மை­யாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்­தி­னார்கள். ஆகவே நாங்கள் மிகவும் நிதா­ன­மாக பொறு­மை­யுடன் நடப்­பவை குறித்து அவ­தா­னித்தோம். பெரும்­பா­லான இடங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. நிட்­டம்­புவ, - திஹா­ரிய பகு­தியில் ஊர்­வலம் சென்று தாக்­கு­தல்கள் நடத்­தி­னார்கள். 

இந்த விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டினோம். நான் பதவி வில­கு­வது அல்ல பிரச்­சனை. ஒரு பௌத்த குருவின் கோரிக்­கைக்கு அடி­ப­ணிந்து பதவி வில­கு­வது முஸ்லிம் சமூ­கத்துக்கு சிறந்­த­தாக அமை­யாது. ஆகவே இதனை வழக்­க­மாக்கி விடக் கூடாது. நாளைக்கு மற்­று­மொரு விட­யத்தை வலி­யு­றுத்­தியும் இவ்­வாறு செயற்­படக் கூடும். ஆகவே இதற்கு அடி­ப­ணிந்து விடக்கூடாது என்­பதே எமது ஆரம்ப நிலைப்­பா­டாக இருந்­தது. 

எவ்­வா­றா­யினும் நிலைமை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரப்­ப­டாத நிலையில் மீண்டும் அனைத்து முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள், உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள் மற்றும் ஊட­கத்­துடன் தொடர்­பு­டைய முஸ்­லிம்கள் என பலரும் கூடி கலந்­து­ரை­யா­டினோம். இதன்போதுதான் பதவி வில­கு­வது குறித்து தீர்­மா­னித்தோம். ஏனெனில் நாங்கள் பதவி வில­கி­யி­ருக்காவிடின் அன்று சாதா­ரண முஸ்லிம் மக்கள் பாரிய அச்­சு­றுத்­தலை எதிர்க்­கொண்­டி­ருப்­பார்கள். 

ஞான­சார தேரரின் அறிவு அவ்­வ­ளவு தான். கடும் நிபந்­த­னையில் விடு­விக்­ கப்­பட்­டுள்ள போதிலும், கொலை செய் வோம், அனைத்து முஸ்லிம் வீடு­க­ளிலும் மர­ணங்கள் ஏற்­படும் என ஒரு சமூ­கத்­துக்கு எதி­ராகப் பகி­ரங்­க­மாக  அச்­சு­றுத்த விடுத்தார். இவரைக் கைது செய்­வ­தற்­கான எவ்­வித முயற்­சி­களும் எடுக்­கப்­பட வில்லை.  அதே போன்று வன்­மு­றை­க­ளி­லி­ருந்து பாது­காக்க எந்­த­வொரு முஸ்லிம் கிரா­மங்­க­ளிலும் இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டி­ருக்கவில்லை. பாது­காப்­பிற்­காக இரா­ணுவம் நிறுத்தி  வைக்­கப்­பட்­டி­ருந்த கிரா­மங்­க­ளிலும் வெறும் வேடிக்கை பார்ப்­ப­வர்­க­ளா­கவே செயற்­பட்­டனர். ஆகவே முஸ்லிம் சமூ­கத்­­துக்கு அழிவு ஏற்­பட்டு விடக் கூடாது. அதற்கு நான் கார­ண­மாகி விடக் கூடாது என்று தீர்­மா­னித்தேன். 

அதேபோன்று பிர­த­மரைச் சந்­தித்த பின்னர் முஸ்லிம் அமைச்­சர்­களும் பதவி விலக தீர்­மா­னித்­தார்கள். முஸ்லிம் சமூகம் அன்­றைய தினம் எதிர்­கொண்­டி­ருந்த அச்­சு­றுத்­தலில் இருந்து பாது­காக்க நாம் பதவி வில­கு­வதே ஒரு வழி­யா­கவும் காணப்­பட்­டது. 

கேள்வி: ஆளு­ந­ராகப் பதவி வகித்த சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்டு அந்த மக்­களின் பாது­கப்பை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காதது ஏன்? 

பதில்:  ஜனா­தி­ப­தி­யிடம் பல முறை குறிப்­பிட்டேன். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அச்­சு­றுத்தல் மேலோங்­கிய போது, ஜனா­தி­ப­தியை  நேர­டி­யாக அவ­ரது வீட்டில் வைத்து சந்­தித்து 45 நிமிடம் வரை பேசினேன். முஸ் லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னையை தெளிவு­ப­டுத்­தினேன். பதவி விலக மாட்டேன் என்று கூறினேன். நீங்கள் ராஜி­னாமா செய்­யுங்கள் என்று என்­னிடம் ஜனா­தி­பதி கூறினார்.   ராஜி­னாமா செய்யா விடினும் பாரிய பிரச்­சி­னைகள் நாட்டில் ஏற்­படும். கடை­களை எரித்து விடு­வார்கள் என்றும் அவர் கூறினார். 

நிலை­மையை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் தெளிவு­ப­டுத்­தினார். அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் அவ்­வாறு ஒருவர் உண்­ணா­விரதம் இருக்க முடி­யாது. தேரரை அப்­பு­றப்­ப­டுத்­துங்கள். பொலி­ஸா­ரையும் இரா­ணு­வத்­தையும் பயன்­ப­டுத்தி தேரரை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­துங்கள். சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள். இதனை செய் ­யாது எம்மைப் பதி­வி­யி­லி­ருந்து விலக்­கு­மாறு கூறு­வதில் என்ன  நியாயம்  என்­ பதை ஜனா­தி­ப­திக்கு நான் தெளிவு­ப­டுத்­தி னேன். ஆனால் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்கவில்லை. 

கேள்வி: முஸ்­லிம்­களை பாது­காக்கும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கைள் திருப்­தி­ய­ளிக்க வில்லை என்றா கூறு­கின்­றீர்கள் ? 

பதில்: பாது­காப்பு விட­யங்­களில் ஜனா­தி­பதி உறு­தி­யாக செயற்­படவில்லை. எங்­களை ராஜி­னாமா செய்ய வைக்­காது நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் செயற்­பாட்டை செய்­தி­ருக்க வேண்டும். இன­வாதம் பேசி நாட்­டையே ஒரு அச்­சத்­திற்குள் கொண்டு வந்த ஞான­சார தேரரை உடன் கைது செய்­தி­ருக்க வேண்டும். அத்­து­ர­லியே ரத்ன தேரரின் உண்­ணா­வி­ர­தத்தை ஜனா­தி­பதி தடை செய்­தி­ருக்க வேண்டும். பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி இது எத­னையும் செய்ய வில்லை. 

கேள்வி: முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஒரு அச்­சு­றுத்­த­லான நிலை­மையே தற்­போது காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் சமூ­கத்தின் பாது­காப்­பிற்­காக எதிர்­கா­லத்தில் எவ்­வாறு செயற்­ப­டு­வீர்கள்? 

பதில்: முஸ்­லிம்கள் பத­வி­க­ளுக்கு அடி­ப­ணிந்­த­வர்கள் என்று நாட்டில் தவ­றான கருத்­தியல் காணப்­பட்­டது. ஆகவே முஸ்­லிம்கள் ஒற்­று­மைப்­பட மாட்­டார்கள் என்ற நிலைப்­பாடும் காணப்­பட்­டது. ஆனால் தற்­போது அவ்­வாறு இல்லை. பத­வி­களைத் துறந்து அனை­வரும் ஒற்­று­மைப்­பட்­டுள்ளோம். தற் ­போ­துள்ள பிரச்­சி­னை­களை தனித்­த­னியே அடை­யாளம் காண்­கின்றோம். எமக்கு கிடைத்­துள்ள தக­வல்­களின் பிர­காரம் சுமார் 2 ஆயிரம் முஸ்லிம் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களுல் உல­மாக்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இதில் 89 பேர் வரை தான் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கமே கூறு­கின்­றது. இவர்­களை விடு­தலை செய்­யு­மாறு நாம் கோரிக்கை விடுக்க மாட்டோம். ஆனால் 2 ஆயிரம் பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­மைக்­கான மக்கள் அறிக்கை உள்­ள­தாக முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் கூறு­கின்­றது. 

ஆனால் அர­சாங்கம் ஆயி­ரத்­திற்கும் குறை­வான எண்­ணிக்­கை­யினை காட்­டு­கின்­றது. ஆகவே எஞ்­சி­ய­வர்கள் எங்கே என்ற கேள்வி எழு­கின்­றது. அர­சாங்­கத்­தி ற்கு அறி­விக்­காது வெறு­மனே பொலிஸ் நிலை­யங்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்­களா? என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கின்­றது. குர்ஆன், தொழுகை அச்­சிட்ட பிளாஸ்டிக் அட்­டைகள் வைத்­தி­ருந்­த­தற்­கா­கவும் பெரும் தொகை­யானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சவூ­தியால் வழங்­கப்­பட்ட மௌலவி ஆடையை வைத்­தி­ருந்­த­தற்­காக மல்­வா­னையில் இரண்டு மௌல­விகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அதே போன்று மஹி­யங்­க­னையில் ஆடையில் தர்ம சக்­கரம் இருப்­ப­தாகக் கூறி கைது செய்­தார்கள். 

குழப்­பங்­களை செய்த 400 பேரை விடு­வித்­துள்­ளனர். இவற்றை திட்­ட­மிட்டு செய்யும் அநி­யாயம் என்­பதை ஜனா­தி­ப­திக்கு தெளிவு­ப­டுத்­தினோம். எனவே நாளை­யி­லி­ருந்து நாங்கள் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­க­ளுக்­காக செயற்­பட உள் ளோம். முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் இதற்­கான ஒத்­து­ழைப்­பு­களை வழங்க உள்­ளது. சிறை­க­ளுக்கு சென்று பார்­வை­யிட்டு உண்­மை­யான எண்­ணிக்­கைளை கண்­ட­றிவோம்.  கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்போம். தேவைப்­படின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­களை பெற்­றுக் ­கொள்வோம். கைதாகியுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சில பொலிஸ் நிலை­யங்­களில் மிகவும் மோச­ மான நிலையே காணப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளுக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வோம். 

அதே போன்று முஸ்­லிம்­களின் ஆடை சம்­மந்­த­மாக பொது நிர்­வாக அமைச்சு சுற்­று­நி­ரூபம் வெளியிட்­டுள்­ளது. இந்த விட­ யத்­திலும் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் நம்­ப­க­மற்ற வேறு­பட்ட கருத்­துக்­க­ளையே முன்­வைக்­கின்­றனர். இந்த விட­யத்தை எளிதில் விட மாட்டோம். ஜன­நா­யக ரீதி­ யாக போரா­டுவோம். முஸ்­லிம்­களை ஒன்­று­தி­ரட்டி அமைச்சை முற்­று­கை­யிட்டு போராட்டம் செய்வோம். பத­வி­களைப் பெறும் நோக்கம் இனி எமக்­கில்லை. சமூ­கத்­திற்­கா­கவே பத­வி­களை பெற்­றுக்­கொண்டோம். 

கேள்வி: இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன? 

பதில்: இஸ்­லாத்தில் அடிப்­ப­டை­வாதம் என்று ஒன்­றில்லை. வஹா­பிசம் என்ற அது அடிப்­ப­டை­வா­தமும் அல்ல. அவ்­வா­றான கொள்­கையும் கிடை­யாது. சுஹு­பிசம் இருக்கு வஹா­பிசம் என்று உல­கத்தில் கொள்கை ஒன்று கிடை­யாது. அப்துல் வஹாப் என்ற ஒருவர் மார்க்­கத்தில் சில திருத்­தங்களைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்­த­தற்­காக அந்த முறையை தான் அவ்­வாறு சொல்­கின்­றனர். ஆனால் அது­வொரு கொள்­கை­யல்ல. 

சூபிசம், ஷியா, சுன்னி என்று முறைகள் உள்­ளன. வஹா­பிசம் என்று ஒன்­றில்லை. முஸ்­லிம்­களை பிள­வுப்­ப­டுத்­து­வ­தற்­காக செய்யும் வேலை­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெண்கள் முகத்தை மூடு­வது என்­பது அடிப்­ப­டை­வாதம் அல்ல. அது மார்க்­க­மாகும். ஒரு காலத்தில் அவ்­வா­றா­ன­தொரு தேவை மார்க்­கத்தில் காணப்­படவில்லை. 20 வரு­டங்­க­ளுக்கு முன்பு இருந்த நிலைமை தற்­போது இலங்­கையில் இல்லை. வீதியில் பெண்கள் சென்றால் கடத்தும் நிலை­மையே தற்­போது காணப்­ப­டு­கின்­றது. ஹபாயா மார்க்­கத்தின் ஒரு பகுதி. 10 வரு­டத்­­துக்கு முன்பு ஹபாயா போட­வில்லை என்­பதற்­காக மார்க்­கத்­­துக்கு உள்­வாங்கக் கூடாது என்­றில்லை. 

பயங்­க­ர­வாதம் என்­பது வேறு. அடிப்­ப­டை­வாதம் என்பது வேறு. பயங்­க­ர­வாதம் காணப்­பட்டால் சம்­மந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது செய்ய வேண்டும். அதற்­காக எல் ­லோ­ரையும் சந்­தே­கப்­பட முடி­யாது. தௌ ஹீத் என்­பது மார்க்கம். அதனை முஸ்­லிம்கள் அனை­வரும் பின்­பற்ற வேண்டும். ஆட்­களை வெட்­டு­வதோ, குண்டு வைப் ­பதோ தௌஹீத் அல்ல. தௌஹீத் ஜமாஅத் என்று பெயரை வைத்­துக்­கொண்டு ஒரு வன் குண்டை வெடிக்க வைத்ததற்­காக தௌஹீத் பிழை­யல்ல. தௌஹீத் என்றால் ஏகத்­துவம். ஒரே இறைவன் என்ற ஏகத்­துவம். இதில் எந்த மாற்­றுக்­க­ருத்­து­மில்லை. தௌஹீத்தை மறுத்தால் அவன் முஸ்­லிமே இல்ைல. ஆகவே ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் தௌஹீத்கள் தான். 

அதே போன்று தான் ஷரியா குறித்தும் தவ­றான கருத்­துக்கள் கூறப்­ப­டு­கின்­றது. ஷரியா என்­பது மார்க்கம். மார்க்­கத்தை படிப்­பது ஷரியா. இலங்­கையில் உள்ள அனைத்து முஸ்­லிம்­களும் ஷரி­யாவை படித்­துள்­ளார்கள். ஷரி­யாவை படிக்­காது எவ்­வாறு இஸ்­லாத்தில் வாழ முடியும்? இதே போன்று தான் பௌத்­தர்­களும் அவர்­க­ளது மார்க்­கத்தை படிக்க வேண்டும். இந்­துக்கள், கிறிஸ்­தவர்­களும் அவர்­க­ளது மதத்தை படிக்க வேண்டும். அவ்­வாறு அல் ­லது எந்­த­வொரு மார்க்­கத்­தையும் பின்­பற்ற இய­லாது. கழி­வறை தொடக்கம் மனை­வி­யுடன் உட­லு­றவு கொள்ளும் வரையில் அனைத்தும் ஷரி­யாவில் கூறப்­பட்­டுள்­ளன. 

அறி­ய­ாமை­யி­னா­லேயே பல பிரச்­சி­னை கள் ஏற்­ப­டு­கின்­றன. ஆகவே இவற்றை தெளிவு­ப­டுத்த உள்ளோம். 

கேள்வி: மட்­டக்­க­ளப்பு பல்க­லைக்­க­ழகம் ஷரியா பல்­க­லைக்­க­ழ­கமா?

பதில்: அங்கே எந்­த­வொரு ஷரி­யாவும் கற்­றுக் ­கொ­டுக்கப்படமாட்­டாது. ஷரி­ யாவை கற்­றுக்­கொ­டுக்க இலங்­கையில் 350 அரபுக் கல்­லூ­ரிகள் உள்­ளன. எனவே மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் குறித்து தவ­றான கருத்­துக்­களே பரப்­ப­ப்படு­கின்­றன. குர்ஆன் மத்­ர­சாக்­களை தவிர்த்து 350 அரபுக் கல்­லூ­ரிகள் காணப்­ப­டு­கின்­றன. இவை அனைத்து முஸ்லிம் விவ­கார அமைச்சில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் தனியார் பல்­க­லைக்­க­ழ­க­மாகும். பொறி­யியல், கட்­டட நிர்­மா­ணத்­துறை மற்றும் தகவல் தொழில்­நுட்பம் போன்ற பட்­டப்­ப­டிப்­பு­களை வழங்க சகல சமூ­கங்­க­ளுக்­கு­மான பல்­க­லைக்­க­ழ­கமா கவே கட்­டப்­ப­டு­கின்­றது. 

கேள்வி: தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. அதனை சஹ்ரான் என்ற நபரே உரு­வாக்­கினார். ஆனால் 2017 ஆம் ஆண்­டிற்கு பின்னர் சஹ்ரான் அந்த அமைப்­பி­லி­ருந்து வெளியேறி விட்டார். அவ்­வாறு வில­கிய சஹ்ரான் இயக்­கிய குழுதான் வெடிக்­குண்­டு­களை வெடிக்க வைத்­தது. இதனால் தான் இன்று முஸ்லிம் சமூகம் நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது. 

கேள்வி: சஹ்­ரானின் நட­வ­டிக்­கைகள் குறி த்து நீங்கள் அறிந்­தி­ருக்க வில்­லையா ? 

பதில்: ஆரம்­பத்­தி­லி­ருந்தே சஹ்­ரானின் நட­வ­டிக்­கைகள் மொத்த சமூ­கத்­தையும் பாதித்­தது. சஹ்­ரா­னினால் காத்­தான்­கு­டியில் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டது நான். ஒவ்­வொரு தேர்­தல்­க­ளிலும் என்னை எதிர்த்து மார்க்­கத்­­துக்கு முர­ணா­னவன் என்று பிரசாரம் செய்வான். 2015ஆம் ஆண்டில் மிகவும் மோச­மாக எனக்கு எதி­ ராக செயற்­பட்டான். பள்­ளி­வா­யல்கள் ஊடாக தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை நாங்கள் செய்­வ­தில்லை. ஆனால் சஹ்ரான் தௌஹீத் பள்­ளி­வா­யல்­களில் மிக மோச­மாக எம்மைச் சாடி அர­சியல் பிர­சாரம் செய்வான். கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது கூட அனை­வ­ரையும் அழைத்துப் பேசினான். பலரின் வேண்­டு­ கோ­ளுக்கு இணங்க நானும் சென்று சந்­தித் தேன். அவ­னு­டைய கொள்­கை­யுடன் ஒத்­துப்­போக முடி­ய­வில்லை. வெறும் 51 வாக்­கு­களால் தோல்­வி­ய­டைந்தேன். காத்­தான்­ கு­டியில் மாத்­திரம் 2 ஆயிரம் வாக்­கு­களை சஹ்ரான் இல்­லாது ஆக்­கினான். தேசிய பட்­டி­யலில் என்னை ஜனா­தி­பதி நிய­மித்த போது சஹ்ரான் தனது குழு­வி­ன­ருடன் வந்து கொழும்பில் ஆர்ப்­பாட்­டமும் செய் தான். 

மார்க்­கத்தில் தீவி­ர­மான ஒரு­வ­னா­கவே சஹ்ரான் காணப்­பட்டான். இதனால் ஏதே னும் காரணங்­களைக் கூறி குழப்­பத்தை உண்­டு­பண்ணுவான். இமாம்­களை கூட சைத்தான் என்று சாடுவான். 2017 ஆம் ஆண்டில் காத்­தான்­கு­டியில் ஏற்­பட்ட பிரச்­சி­ னையை அடுத்து சஹ்ரான் குழு ஊரை விட்டு ஓடி­யது. இதற்கு பின்னர் தான் ஐ.எஸ். அமைப்­புடன் இணைந்து ஆயுத ரீதி­யான போக்கில் செயற்­பட்­டுள்­ளனர். 

கேள்வி:  சஹ்ரான் குழு காத்­தான்­கு­டியில் குண்­டு­களை வெடிக்க வைத்து ஒத்­திகை பார்த்­துள்­ளனர். 

பதில்: இந்த சம்­ப­வங்கள் அனைத்­துமே குறு­கிய காலப்­ப­கு­தியில் தான் இடம்­பெற்­றுள்­ளன. 

கேள்வி:  பாது­காப்பு தரப்பு நீண்ட கால­மாக சஹ்ரான் குழுவை கண்­கா­ணித்­ததாகக் கூறு­கின்­றது. பள்­ளி­வாயல் சம்­மே­ளனம் இவர் குறித்து கவ­னத்தில் கொள்ள வில்­லையா ? 

பதில்: காத்­தான்­குடி நக­ருக்குள் சஹ்ரான் குழு 2017 ஆம் ஆண்­டிற்கு பின்னர் செயற்­படவில்லை. பால­முனை மற்றும் ஒள்ளிக்­குளம் போன்ற பகு­தி­களில் தான் குண்­டு­களை வெடிக்க வைத்து ஒத்­திகை பார்த்­துள்­ளனர். இவர்­களின் செயற்­பாட்­டினால் முஸ்லிம் சமூகம் தலை­கு­னிவை சந்­தித்­துள் ­ளது. தெரிந்­தி­ருந்தால் அனு­ம­தித்­தி­ருக்க மாட்டோம். ஆனால் இலங்கை புல­னாய்வு பிரிவு, இரா­ணுவம் மற்றும் பொலிஸார் என்ன செய்­தனர். இடம்­பெறப்போகும் தாக்­குதல் குறித்து ஏற்­க­னவே எச்­ச­ரித்தும் ஒன்றும் செய்­யா­தது ஏன்? 

கேள்வி: இந்­தியா எவ்­வாறு சஹ்ரான் குழு­வினர் குறித்து கூர்­மை­யாக கண்­கா­ணித்­தது? 

பதில்: அவர்கள் கண்­கா­ணித்­துள்­ளார்கள். தகவல் கொடுத்­துள்­ளார்கள். அரசாங்கம் என்ன செய்­தது. நாங்கள் அப்­பா­விகள். எங்­க­ளுக்கு ஒன்றும் தெரி­யாது. தகவல் கிடைத்­தி­ருந்தால் வழங்­கி­யி­ருப்போம். சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்­பையும் அர­சா ங்கம் ஏற்க வேண்டும். 

கேள்வி: கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஏன் உங்­க­ளுடன் பகை­யு­ணர்­வுடன் உள்­ளனர் ? 

பதில்: இது தவ­றான செய்­தி­யாகும். வியா­ழேந்­திரன் போன்­ற­வர்­களே அர­சியல் நோக்­கத்­­துக்­காக இவ்­வாறு தவ­றான கூற்­றைப்­ப­ரப்­பு­கின்­றனர். கோவிலை உடைத்தேன் என்று கூறு­ப­வர்கள் அதனை ஆத­ார­பூர்­வ­மாக நிரூபிக்க முன்­வ­ரு­வ­தில்லை. கிழக் கில் தமிழ் மக்­க­ளுக்கு நான் செய்­தது போன்று அங்­குள்ள எந்த தமிழ் அர­சி­யல்­வா­தியும் செய்யவில்லை. அதனை அந்த மக்கள் அறி­வார்கள். தேர்­தலின்போது நான் கூறிய விட­யத்­தையே வீடியோ பதி­வு­க­ளாக காண்­பிக்­கின்­றனர். அவ்­வாறு எந்­த­வொரு சம்­ப­வமும் நடக்கவில்லை.  

கேள்வி: சுதந்­திரக் கட்­சிக்குள் உங்­க­ளது எதிர்­கால அர­சியல் பயணம் எவ்­வாறு அமை யும்?

பதில்: பயங்­க­ர­வா­தத்­­துக்கு நாங்­களும் துணை­ போேனாம் என்ற போலி­யான குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கின்­றது. தலதா மாளி­கைக்கு முன்னால் ஞானசார தேரர் சீ.சீ.டி.வி பதிவு ஒன்றைக் காண்­பித்தார். இது ஏற்­க­னவே வெளிவந்த விட­ய­மாகும். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் கட்­சியை விட்டு வெளியே­ற­வேண்டியதில்லை. ஆனால் எனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரித்து இரு வாரங்­க­ளுக்குள் அறிக்கை விட வேண்டும் என்ற கோரிக்­கை­யினை ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்தேன். சமூ­கத்­­துக்­காகத்தான் பத­வியை விட்டுச் சென்றேன். ஜனா­தி­ப­தி­யினால் என்னைப் பதவி நீக்கம் செய்ய முடி­யாது. அதில் சட்ட சிக்கல் உள்­ளது. 

எவ்­வா­றா­யினும் எனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் உட­ன­டி­யாக விசா­ரிக்­கப்­பட்டு அறி­விக்­கப்­பட வேண்டும். இது ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். மூடி மறைக்க வேண்­டிய தேவை­யில்லை. இல்லையென்றால் வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை நேரடியாகவே ஜனாதிபதிக்கு கூறி விட்டேன். 

தலதா மாளிகைக்கு முன்பாக இருந்து கொண்டு எனக்கு எதிராக ஞானசார தேரர் அப்பட்டமான பொய்யைக் கூறி னார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நான் கடுமையாக செயற்படுவேன். இனி எங்களுக்குப் பதவிகள் முக்கியமில்லை. இவர்களுடன் போராடுவோம். எமது சமூகத்தையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்கள் அச்சப்பட்டு முடங்கியுள்ளனர். அவர்களை வெளியில் கொண்டுவர வேண் டும். தைரியமாக வியாபாரங்களில் ஈடுபட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். 

7 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வெளி நாட்டில் தஞ்சம் கோரியுள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது. இது எங்கள் நாடு. நாட்டை விட்டுப் போக வேண்டிய தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை. முஸ் லிம் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்­துக்கு முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வலியுறுத்துவோம். இலங்கை எங்களுக்கு உதவி செய்ய மறுத்தால் சர்வதேச சமூ கத்தை நாடுவோம். 

கேள்வி:  தற்போதைய அரசாங்கம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 

பதில்: நம்பிக்கையற்ற வகையில் தான் அரசாங்கம் நடந்துகொண்டுள்ளது. பயங்க ரவாதி குண்டு வெடிக்க வைத்ததற்காக சாதாரண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது எவ்விதத்தில் நியாயமாகும். முஸ்லிம் மக்களைத் தாக்கிய, அவர்களது சொத்துக்களை அழித்தவர்களைக் கைது செய்து உடனடியாக விடுவித்துள்ள போது அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும். 

லியோ நிரோஷ தர்ஷன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22