அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கியுள்ளது: டக்ளஸ்

Published By: R. Kalaichelvan

08 Jun, 2019 | 08:43 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கி ஊடகங்களிலே காட்டிக் கொண்டுத்து வருகின்றது. தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்தி விட்டால் ஒரு முதலீட்டாளராவது இந்த நாட்டின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் உள்விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

இந்த நாட்டில் இதுவரையில் எத்தனையோ பாரதூரமான ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன.பொது மக்களது பணம் பட்டப்பகலிலே கொள்ளையிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளமாக ஏற்பட்டுள்ளன. 

இவை பற்றி எல்லாம் இத்தகைய பகிரங்கமான விசாரணைகள் மேற்கொண்டு மக்களுக்கு உண்மைகளை வெளிக் கொண்டு வராமல் ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான உள்விவகாரங்களை தெரிவுக்குழுவில் இவ்வாறு பகிரங்கப்படுத்திக் கொண்டிருப்பது இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

எனவே தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்திவிடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் பலம், இரகசியத் தன்மை,மதிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டு நலன்களில் அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36