இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டியில் திறமையாக விளையாட எண்ணியுள்ளோம் ; இலங்கை பயிற்றுநர் பக்கீர் அலி

Published By: Digital Desk 4

07 Jun, 2019 | 06:19 PM
image

(நெவில் அன்தனி)

‘‘மெக்கௌ எவ்வாறு விளையாடுகின்றது என்பதை அறிந்துகொண்டோம். அதற்கேற்றவாறு இரண்டாம் கட்டப் போட்டியில் அதி திறமையாக விளையாட எண்ணியுள்ளோம்’’ என இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநுர் பக்கீர் அலி தெரிவித்தார்.

கத்தார் 2022 உலகக் கிண்ணம், சீனா 2023 ஆசிய கிண்ணம் ஆகிய கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு மெக்கௌ அணிக்கு எதிராக ஸுஹாய் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற முதலாம் கட்ட முதல் சுற்று தகுதிகாண் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்த பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேசியபோது பக்கீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்நிய மண்ணில் ஒரு கோல் வித்தியாசத்தில் மாத்திரமே தோல்வி அடைந்ததால் இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டியில் தனது அணி சிறப்பாக வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பக்கீர் அலி நம்பிக்கை வெளியிட்டார்.

‘‘மெக்கௌ விளையாடும் விதத்தை நாம் அறிந்துகொண்டோம். எனவே எம்மால் இதனைவிட சிறப்பாக விளையாட முடியும் என நம்புகின்றோம். எமது இளம் வீரர்களைக் கொண்டு அதிகப்பட்ச திறமையை வெளிபடுத்தி வெற்றிபெற முயற்சிப்போம். எமது அணியினால் அடுத்து சுற்றுக்கு நிச்சயமாக முன்னேற முடியும்’’ என்றார் பக்கீர் அலி.

உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணம் ஆகிய இரண்டுக்குமான இரண்டாவது சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை இலங்கை பெறவேண்டுமானால் ஒட்டுமொத்த நிலையில் 2 கோல்கள் வித்தியாசத்தல் வெற்றிபெற்றே ஆகவேண்டும். 

‘‘எமது இளம் வீரர்கள் நாளுக்கு நாள் முன்னெற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்நீச்சல் போடுவதில் எமது வீரர்கள் சிறந்தவர்கள். எனவே சொந்த மண்ணில் இதனை திறமையாக விளையாட முடியும் என நம்புகின்றோம்’’ என பக்கீர் அலி குறிப்பிட்டார்.

இலங்கை அணி கோல் போடும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டதாகக் கூறுகின்றார். ஆனால், மெக்கௌ கோல்காப்பாளர் ஹோ மென் பாய்க்கு இலங்கை வீரர்கள் சவால்விடுக்கவில்லை என அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

கவிந்து இஷான், ஹர்ஷ பெர்னாண்டோ ஆகிய நீண்ட தூரங்களிலிருந்து கோல்களைப் போட முயற்சித்ததாகவும் எதிரணியின் கோலுக்கு அருகாமையில் செல்லக்கூடிய சந்தர்ப்பம் இலங்கை வீரர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் ஆசிய கூட்டுசம்மேளன இணையத்தள செய்தி கூறுகின்றது.

எனவே இரண்டாம் கட்டப் போட்டியில் பக்கீர் அலியின் அணியினர் வித்தியாசமான வியூகங்களை அமைத்து மெக்கௌவின் பின்களத்தை ஊடுறுவ முயற்சிப்பது அவசியம் என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்கௌ பயிற்றுநர் இயொங் சோ இயெங்

‘‘இலங்கைகக்கு எதிரான வெற்றியையிட்டு நான் பெரிதும் திருப்தி அடைகின்றேன். இதனை விட எனது வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது’’ என உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் மெக்கௌ ஈட்டிய வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில் மெக்கௌ பயிற்றுநர் இயொங் சோ இயெங் தெரிவித்தார்.

‘‘ஆனால் இந்த 90 நிமிடங்களுடன் ஆட்டம் முடியவில்லை. இன்னும் ஒரு 90 நிமிட ஆட்டம் தொடரவுள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தருகின்றபோதிலும் இந்தப் போட்டி முடிவு எமக்கு போதுமானதாகத் தெரியவில்லை. எமது சொந்த நாட்டில் 2 க்கு 0 என வெற்றிபெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இலங்கையில் கடுமையாக விளையாட வெண்டிவரும்’’ என்றார் அவர்.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணியினரும் தடுத்தாடும் உத்தியைக் கையாண்ட அதேவேளை மெக்கௌ அணியினர் சில சந்தர்ப்பங்களில் இலங்கை பின்களத்தை ஊடுறுவியவாறு விளையாடினர். ஆனால் பொதுவாக ஆட்டத்தின் முதல் பகுதியில் சிறப்பாக விளையாடும் இலங்கையின் பின்களத்தினர் கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.

எவ்வாறாயினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து ஏழாவது நிமிடத்தல் (52 நி.) மெக்கௌ வீரர் லாம் கா செங்கின் கோர்ணர் உதையை இலங்கை பின்கள வீரர்கள் முறையாக திசை திருப்பத் தவறினர். 

இதனை சாதகமாக்கிக்கொண்ட பொர்த்துக்கலைப் பிறப்பிடமாகக் கொண்ட மெக்கௌ பின்கள வீரர் பிலிப்பெ டுவார்ட்டே, பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார். அதுவே மெக்கௌவின் வெற்றி கோலாக பதிவானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09