இலங்கையை கப்பற்றுறையின் கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதே ஒரே இலட்சியம் - சாகல

Published By: Daya

07 Jun, 2019 | 04:49 PM
image

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 99 வீதமானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

தற்போது நாடு துரிதகதியில் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. வர்த்தக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  சுற்றுலா துறையும் சாதகமான நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற  நிலையில் இலங்கையை கப்பற்றுறையின் கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் ஒரே இலட்சியமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜேர்மனியில் நடைபெறும் 2019 போக்குவரத்து மற்றும் சேவை வழங்கல் கண்காட்சியில் இலங்கைக்கான கண்காட்சி கூடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 99 வீதமானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் , அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். தற்போது நாடு துரிதகதியில் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. வர்த்தக நடவடிக்கைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  சுற்றுலா துறையும் சாதகமான நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. 

சீரமைப்பு நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு இலங்கையை கப்பற்றுறை மற்றும் சேவை வழங்கல் கேந்திரநிலையமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இத்துறைக்குள்ள முக்கிய தேவையாகவும் கருதப்படுகின்றது.  தென் ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை கப்பற்றுறை சார் கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதே பிரதான குறிக்கோளாகும்.  இலங்கையானது இந்து சமுத்திரத்தின் கிழக்கு - மேற்கு கப்பற் பாதைக்கு அருகாமையிலே அமைந்துள்ளது. இக்குறுக்கு பாதையே உலகில் வேகமாக வளர்ச்சியடையும் கப்பற் பாதையென்பதனால் இதன் மூலம் அதிகளவு வர்த்தக இலாபமீட்ட முடியும். 

இலங்கை அரசாங்கமானது முழுமையான மற்றும் காலத்திற்கு உகந்த போக்குவரத்து அபிவிருத்தி சேவை வழங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அர்பணிப்புடன் செயற்படுகின்றது. 2019 போக்குவரத்து மற்றும் சேவை வழங்கல் கண்காட்சியில் பங்குக்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கை பிரதிநிதிகள் சர்வதேச வர்தகர்களுடன் புதிய வலையமைப்பை உருவாக்குவதற்கு இக்கண்காட்சி பெரிதும் துணைப்புரிகின்றது. நாம் இன்று ஏற்படுத்திக்கொள்ளும் இப்புதிய உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் நல்லெண்ண அடிப்படையில் எங்களுடைய அபிலாசைகள் மற்றும் குறிக்கோள்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுமென நான் நினைக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27