அறிவுபூர்வமாகச் செயற்படாவிட்டால் பாரிய மதப் பிரச்சினையாக பெரிதாகும் - சம்பிக்க

Published By: Daya

07 Jun, 2019 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

விடுதலைப்புலிகளைப் போன்று ஆட்சியைக் கைப்பற்றுவது இவர்களது நோக்கம் கிடையாது. உயிர்களைப் பலியெடுப்பது மாத்திரமே இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்காக நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றனர். எனவே இந்த விடயத்தில் அறிவுபூர்வமாகச் செயற்படாவிட்டால் பாரிய மதப் பிரச்சினையாக இது பெரிதாகும்  என பெரு நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

' நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய வழி " வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் மாநாடு வியாழக்கிழமை கண்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் கிழக்கு, மேல் மாகாண ஆளுனர்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்துவது பொறுத்தமல்ல. பொலிஸ் அல்லது புலனாய்வுத் துறையில் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால் அதனை நிரூபிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற ரீதியாக மாத்திரமன்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். 

பாராளுமன்றத்திற்கோ அல்லது தெரிவுக்குழுவிற்கோ இது குறித்து விசாரிக்க முடியாது. ஆனால் அதன் உண்மை தன்மை குறித்து ஆராய முடியும். ஆனால் விசாரணைகள் பாதுகாப்பு சபையிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்த முடிவு கவலைக்குரியது. ' நீங்கள் இந்த முடிவினை எடுத்ததற்கு என்ன காரணம் கூறினாலும், முஸ்லிம்கள் சார்பில் மாத்திரம் இருந்து இந்த முடிவை எடுத்ததாகவே ஏனையோர் எண்ணுவார்கள் " என்று நான் அவர்களிடம் தெரிவித்துள்ளளேன். 

இவர்கள் இவ்வாறு முடிவொன்றினை எடுக்கும் போது பௌத்தர்கள் என்ற ரீதியில் நாம் ஒரு பக்கமும், கிறிஸ்தவ அமைச்சர்கள் ஒரு பக்கமும் தத்தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கி விடுவார்கள். இது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸாருக்கு பாரிய பொறுப்பு உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09