இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களைத்  தளர்த்த பிரிட்டன், கனடா 

Published By: Vishnu

07 Jun, 2019 | 04:00 PM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை செல்வதற்கு விதித்திருந்த கடுமையான பயண எச்சரிக்கைகளை பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் தளர்த்தியிருக்கின்றன.

மிக முக்கியமான சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் இலங்கைக்குப் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு எமது நாட்டைச் சேர்ந்த பிரயாணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையைத் தளர்த்தியிருப்பதாக பிரித்தினாய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. 

அதேபோன்று மிக முக்கியமான தேவையில்லை எனும் பட்சத்தில் இலங்கைக்குப் பயணிப்பதைத் தவிர்க்கும்படி கனடா தனது பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயண அறிவுறுத்தலை நீக்கியிருக்கிறது. எனினும் அவசரகால நிலைமை தொடர்வதுடன், பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்புக்களும் இருப்பதால் இலங்கைக்கு வருகைதரும் கனேடிய பிரஜைகள் உயர் முன்னெடுச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று கனடா தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51