'ஐ.சி.சி.யின் விதிமுறையை தோனி மீறவில்லை'

Published By: Vishnu

07 Jun, 2019 | 03:30 PM
image

ஐ.சி.சி.யின் விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி மீறியுள்ளதாக ஐ.சி.சி. முன்வைத்த குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை முற்றாக மறுத்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சவுதம்டனில் இடம்பெற்ற போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தோனி தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்திய இராணுவ முத்திரையை ஒத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுறையை பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.

தோனியின் இந்தச் செயலைப் பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினார்கள் எனினும் இதனை கண்காணித்த ஐ.சி.சி., தோனியின் கையுறையில் இராணுவ முத்திரையை பொறித்து இருப்பது ஆட்ட விதிமுறைக்கு எதிரானதாகும். எனவே அந்த முத்திரையை அடுத்த போட்டிக்குள் அகற்றும் படி இந்திய கிரிக்கெட் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் இது குறித்து  தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய்,  டோனியின் கையுறையில் இருப்பது இராணுவ முத்திரை இல்லை எனவும் அதனை தோனி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி ஐ.சி.சி.க்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.சி.சி.யின் விதிமுறைகளை தோனி மீறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35