மிட்செல் ஸ்டாக் முதலிடத்தில் !

Published By: Vishnu

07 Jun, 2019 | 02:52 PM
image

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட்டுக்களை வேகமாகக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர்  மிட்செல் ஸ்டாக் படைத்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 150 விக்கெட்டுக்களை சாய்த்த வீரர் பட்டியலில் இதுவரை பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஸ்தாக் முதல் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் மிச்செல் ஸ்டடாக் 10 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு, 46 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுக்களை சாய்தார்.

இதன் மூலம் அவர் 77 போட்டிகளில் விளையாடி வேகமாக 150 விக்கெட்டுக்களை எடுத்த வீரர் என்ற பட்டியலில் ஸ்டாக் முதலிடம் பிடித்தார். 

வேகமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக் (78 போட்டி), இரண்டாம் இடத்திலும், டிரெண்ட் போல்ட் (81 போட்டிகள்) மூன்றாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணியின் பிராட் லீ (82 போட்டிகள்) நான்காம் இடத்திலும், இலங்கையின் அஜந்த மெண்டிஸ் (84 போட்டிகள்) ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

இதுவரை 77 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டாக் 151 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35