ஆசிய க்ரோன் ப்றீ இரண்டாம் கட்டப் போட்டியிலும் பதக்கங்களை வெல்லும் முயற்சியில் இலங்கையர்

Published By: R. Kalaichelvan

07 Jun, 2019 | 01:31 PM
image

(நெவில் அன்தனி)

சீனாவின் சொங்குவிங் வினையாட்டரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் கட்ட ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

ஜியாங்ஜின்னில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற முதலாம் கட்ட க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளில் நான்கு பதக்கங்களை வென்றெடுத்த இலங்கை, இரண்டாம் கட்டத்தில் அதனைவிட குறைந்தது மேலும் இரண்டு பதக்கங்களை வெல்வதற்கு முயற்சிக்கும் என மெய்வல்லுநர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கத்தாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் விதூஷா லக்ஷானி மூலம் ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை, சீன க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டிகளின் முதலாம் கட்ட 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றமை ஓரளவு திருப்தி தருவதாக இலங்கை மெய்வல்லநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ திருப்தி வெளியிட்டார்.

இலங்கை மெய்வல்லுநர்கள் இன்னும் அதிக முயற்சியுடன் போட்டியில் இன்றைய இரண்டாம் கட்டப் போட்டியில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் என்றார் அவர். எனினும் சீனா போன்ற நாடுகளில் ஏனைய ஆசிய நாட்டவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவது இலகுவானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜியாங்ஜின்னில் செவ்வாயன்று நடைபெற்ற முதலாம் கட்ட ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்காக மூன்று பெண்களும் ஒரு ஆணும் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதிஷா ராமநாயக்க (53.24 செக்.), நிமாலி லியனஆராச்சி (2 நி. 03.17 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்ன (2 நி. 03.47 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் வீரர் சுமேத ரணசிங்க (76.92 மீ.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றிய ஏனையவர்ககளில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அஜத் ப்ரேமகுமார (46.69 செக்.) நான்காம் இடத்தையும் முப்பாய்ச்சலில் க்ரேஷான் தனஞ்சய (16.02 மீ.)ஆறாம் இடத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ருசிறு சத்துரங்க (1 நி. 56.27 செக்.) ஆறாம்  இடத்தையும் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிக்கா பெர்னாண்டோ (14.28 மீ.) ஐந்தாம் இடத்தையும் உயரம் பாய்தலில் துலாஞ்சலி ரணசிங்க (1.70 மீ.) ஏழாம் இடத்தையும் பெற்றனர்.

இவர்கள் அனைவருமே இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35