வீர­கே­ச­ரியின் சிரேஷ்ட பிராந்­திய ஊட­க­வி­ய­லாளர்  சிவம் கால­மானார்

Published By: Daya

07 Jun, 2019 | 11:09 AM
image

வீர­கே­சரி பத்­தி­ரி­கை யில் 53 வருட காலம் கண்டி மாவட்­டத்தின் பிராந்­திய சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்றி வந்த க.ப.சிவம் தனது 86 ஆவது வயதில் நேற்று கால­மானார். 

கடந்த சில வாரங்­க­ளாக சுக­யீ­ன­முற்ற நிலையில், கண்டி வைத்­தி­ய­சாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வந்த நிலை­யி­லேயே நேற்று பகல் கால­மானார். பிர­பல வர்த்­த­கர்­காலஞ்­சென்ற கருப்­பண்ணபிள்­ளையின் புதல்­வ­ரான சிவம், தமது ஆரம்பக் கல்­வியை அம்­பிட்­டிய பெர்வட்ஸ் கல்­லூ­ரி­யிலும்,  உயர் கல்­வியை கண்டி புனித சில்­வெஸ்டர் கல்­லூ­ரி­யிலும் கற்றார்.

பாட­சா­லை­களில் கல்வி கற்­கின்ற காலத்­தி­லேயே தமிழ் மொழிக்கும், மலை­யக வாழ் மக்­க­ளுக்கும் உரிமை வேண்டும் என குரல் எழுப்பி வந்தார். மலை­யக சமூ­கத்தின் விடி­வுக்­காக 'மலை முரசு' என்ற சஞ்­சி­கையை வெளி­யிட்டு வந்தார்.

1966 ஆம் ஆண்டு வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் இணைந்­து­கொண்ட இவர், இறக்கும் வரை பிராந்­திய ஊட­க­வி­ய­லா­ள­ராக வாழ்ந்து வந்தார்.  சமா­தான நீதி­வா­னா­கிய இவர், இரத்­தின தீபம், கலா­பூ­ஷணம், தமிழ் மணி, பேரா­தனை பல்­க­லை­க­ழக தமிழ் மன்­றத்தின்  'தங்கச் சான்றோன்', மத்­திய மாகாண தமிழ் கல்வி இந்து கலா­சார அமைச்­சினால் மூன்று முறை தமிழ் சாகித்­திய விரு­து­க­ளையும்  பெற்றுள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர் பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19