ஜனா­தி­பதி தேர்தல் திக­தியை  ஆணைக்­கு­ழுவே தீர்­மா­னிக்கும் - ரட்­ண­ஜீவன் ஹூல்

Published By: Digital Desk 3

07 Jun, 2019 | 11:03 AM
image

(நமது நிருபர்)

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்­கான அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி பறிக்­கும்­போது நாங்கள் அமை­தி­யாக இருக்க முடி­யாது. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்­தலை வேறு திக­தியில் வைத்­தாலும் சரி, டிசம்பர் 7 ஆம் திகதி நடத்­தக்­கூ­டாது என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் கூறி­யி­ருக்­கிறேன் என ஆணைக்­கு­ழுவின் உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ண­ஜீவன் ஹூல் தெரி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் தற்­பொ­ழுது ஜன­நா­யகம் சரி­யாக நிலை நாட்­டப்­ப­ட­வில்லை. தேர்தல் திக­தியை குறிப்­பி­டு­வ­தற்கு ஜன­நா­யக தேர்தல் சட்­டங்கள் என்ற சட்டம் இருக்­கின்­றது. அதன்­படி தேர்தல் திக­தியைக் குறிக்கும் அதி­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு மட்­டுமே உள்­ளது. அது வேறு யாருக்கும் இல்லை.

கடந்த வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போது  ஒரு விட­யத்தை கூறி­யி­ருந்தோம்.  நவம்பர் மாதம் 15 ஆம் திக­திக்கும் டிசம்பர் 7 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட நாளில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என அவ­ரிடம் எடுத்துக் கூறினோம். அதற்குள் நாங்­களும் அதைத் தீர்­மா­னிப்போம் என்றும் சொல்­லி­யி­ருந்தோம்.

இதில் ஒரு சிக்கல் உள்­ளது.  தேர்தல் முடிந்­த­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெறா விட்டால், அவர் உட­ன­டி­யாகப் பதவி விலகி வெற்­றி­பெறும் புதிய ஜனா­தி­ப­திக்கு இடத்தைக் கொடுக்க வேண்டும். 

இந்தக் கார­ணங்­க­ளி­னாலோ என்­னவோ எங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இரண்டு தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி இந்­தி­யா­வுக்குச் சென்­று­விட்டார்.  அங்கு வைத்து அவர் டிசம்பர் 7 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெறும் என்று அறி­வித்­தி­ருக்­கிறார்.

ஆக நாங்கள் கொடுத்த காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை­யான காலம். எவ்­வ­ளவு காலம் கூடு­த­லாக ஜனா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமோ அதற்குத் தக்­க­வ­கையில் அவர் திக­தியைக் குறித்­தி­ருக்­கிறார். 

எங்­க­ளுக்­கான அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி அப்­படிப் பறிக்­கும்­போது நாங்கள் அமை­தி­யாக இருக்க முடி­யாது. அத­னால்தான் இத்­தேர்­தலை என்ன திக­தியில் வைத்­தாலும் சரி, டிசம்பர் 7 இல் வைக்கக் கூடாது என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு கூறி­யி­ருக்­கிறேன். ஏனெனில் அது எங்­க­ளு­டைய அதி­காரம்.  அதா­வது தேர்தல் தொடர்­பான திக­தியை தேர்­தல்கள் ஆணைக்­குழு தான் இறு­தியில் தீர்­மா­னிக்கும்.

எதிர்­வரும் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 க்கு இடையில் எந்த நாள் வைப்­ப­தென்று தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னிக்கும். ஆனால் ஜனா­தி­பதி கூறிய 7 ஆம் திகதி தேர்தல் நடக்­காது என்று நான் நம்­பு­கின்றேன். இதை நாங்கள் கவ­னிக்­காமல் விட்டு 7 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினால் அடுத்து வரும் ஜனா­தி­ப­தியும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் வேறு அதி­கா­ரங்­க­ளையும் பறிப்பார். 

ஆனாலும் ஜனா­தி­பதி எங்கள் அதி­கா­ரங்­களை எடுத்து உப­யோ­கிக்­கக்­கூ­டாது. சட்­டத்­தின்­படி நாட்டை நடத்­து­வ­துதான் ஜன­நா­யகம். சட்டம் இல்­லாமல் ஜன­நா­ய­கமும் இல்லை. ஆக இந்த இடத்தில் ஜனா­தி­பதி ஜன­நா­ய­கத்­தையே குழப்­பி­விட்டார் என்றே கூறு­கிறோம். 

ஜன­நா­யக முறையின் அடிப்­ப­டையில் எங்கள் வாக்கை உப­யோ­கித்து பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­கின்றோம். அவ்­வாறு பிர­தி­நி­திகளைத் தெரிவுசெய்த பின்னர் அவர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குச் செல்­கின்­றார்கள். எந்தக் கட்­சிக்கு கூடிய ஆச­னங்கள் இருக்­கி­றதோ அந்தக் கட்­சிதான் பிர­த­ மரை நியமிக்கிறது. அந்தக் கட்சிதான் ஜனாதி பதியுடன் ஆலோசித்து அமைச்சர்களை தெரிவு செய்கிறது. இதுதான் ஜனநாயகம். 

அமைச்சர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது ஜனநாயகமா என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41