பௌத்த பிக்­கு­மாரின் அத்­து­மீ­றிய செல்­வாக்­கிற்கு எதி­ராக  ஜனா­தி­ப­தி, பிர­த­மர் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை - த இந்து

Published By: Vishnu

07 Jun, 2019 | 10:55 AM
image

நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக் குவிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இந்­தி­யாவின் பிர­பல தேசிய ஆங்­கிலத் தின­ச­ரி­களில் ஒன்­றான "த இந்து", ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு நாட்டில் தோன்­றி­யுள்ள அர­சியல் நிலை­வ­ரத்தின் மீது சில பௌத்த பிக்­குமார், அவர்­க­ளது அள­வுக்கு ஒவ்­வாத முறையில் செல்­வாக்குச் செலுத்­து­வ­தற்கு எதி­ராகக் கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தவ­றி­யி­ருப்­ப­தாகச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

இலங்­கையின் தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் தொடர்பில் இலங்­கையில் முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா தொடர்­பாக என்ற மகு­டத்தில் நேற்­றைய தினம் ஆசி­ரியர் தலை­யங்­கத்தைத் தீட்­டி­யி­ருக்கும் அந்தப் பத்­தி­ரிகை, முஸ்லிம் சமூ­கத்­த­வர்­களை ஆபத்­தா­ன­வர்­க­ளாகக் காட்டும் ஒருங்­கி­ணைந்த திட்­ட­மிட்ட பிர­சா­ர­மொன்று இப்­போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்று விசனம் வெளியிட்­டி­ருக்­கி­றது.

ஆசி­ரியர் தலை­யங்­கத்தின் முழு விபரம் வரு­மாறு:

இஸ்­லா­மியத் தீவி­ர­வாதக் குழு­வொன்­றினால் கடந்த உயிர்த்த ஞாயி­றன்று நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு இலங்கைத் தீவில் வெளிக்­கி­ளம்­பிய புதிய பிள­வொன்றை இரு முஸ்லிம் ஆளு­நர்­களும், ஒன்­பது அமைச்­சர்­களும் கூண்­டோடு இரா­ஜி­னாமா செய்த சம்­பவம் மேலும் ஆழப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­த­தா­கவும், விசா­ர­ணை­களில் தலை­யீடு செய்­த­தா­கவும் மாகாண ஆளு­நர்­க­ளான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஆகிய மூவர் மீதும் குற்­றஞ்­சாட்­டிய சிங்­கள பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் அவர்­களைப் பதவி விலக வேண்­டு­மெனக் கோரினர்.

அந்த மூன்று முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் எதி­ராக சுமத்­தப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் எந்­த­வொரு சான்­றுமே விசா­ர­ணை­யா­ளர்­க­ளினால் கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத ஒரு நேரத்தில் இவ்­வா­றாக ஆக்­ரோ­ஷ­மான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டதால் சின­ம­டைந்த அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த சகல முஸ்லிம் அமைச்­சர்­களும் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்து தங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு­மைப்­பாட்டை வெளிக்­காட்­டி­னார்கள். 

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பௌத்த பிக்கு அத்­து­ர­லியே ரத்ன தேரர் கண்­டியில் சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்து வைத்­த­தை­ய­டுத்து முஸ்­லிம்­க­ளுக்கும், இந்த அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ரான பிர­சாரம் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யது. தேர­ருக்கு ஆத­ர­வாக ஆயி­ரக்­க­ணக்­கானோர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளிலும், ஆடம்­பர ஹோட்­டல்­க­ளிலும் 250 இற்கும் அதி­க­மா­ன­வர்­களை பலி­யெ­டுத்த குண்­டுத்­தாக்­கு­தலின் விளை­வாகத் தோன்­றிய கொந்­த­ளிப்பு சகல இனத்­த­வர்கள் மத்­தி­யிலும் பீதி­யையும், அவ­நம்­பிக்­கை­யையும் ஏற்­ப­டுத்­தி­யது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­செ­யல்­களும், அச்­சு­றுத்­தல்­களும் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் விளை­வான தன்­னிச்­சை­யான செயற்­பா­டு­க­ளாக அன்றி, திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யா­கவே தோன்­றின. இஸ்­லா­மியத் தீவி­ர­வாத மதப்­பி­ர­சா­ரகர் சஹ்­ரானின் தலை­மை­யி­லா­னதும், தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களை உள்­ள­டக்­கி­ய­து­மான தேசிய தௌஹீத் ஜமா-அத் இயக்கம் பாது­காப்புப் படை­யி­ன­ரதும், பொலி­ஸா­ரி­னதும் துரித நட­வ­டிக்­கை­களால் நிர்­மூலம் செய்­யப்­பட்­டு­விட்­ட­தையும் பொருட்­ப­டுத்­தாமல் முஸ்­லிம்கள் மீது வன்­மு­றைகள் தூண்­டப்­பட்­டன.

குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நூற்­றுக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டார்கள். இஸ்­லா­மிய அரசின் பிர­சா­ரங்­க­ளினால் தூண்­டி­வி­டப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய சதித்­திட்­டமும் அம்­ப­ல­மா­னது. குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெ­றக்­கூ­டிய ஆபத்­தி­ருப்­ப­தாக முன்­கூட்­டியே கிடைக்­கப்­பெற்ற புல­னாய்வுத் தக­வல்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­ய­தற்­காக அர­சாங்­கத்தைப் பொறுப்­புக்­கூற வைக்­காமல் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றமை ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கின்­றது. எந்­த­வொரு சமூ­கத்­திலும் இருக்­கக்­கூ­டிய இனக்­கு­ழும பெரும்­பான்­மை­வாத  உணர்­வுகள் எப்­போ­துமே குற்­றஞ்­சாட்­டு­வ­தற்கு ஒரு அடுத்­த­வ­ரையும் புதிய எதி­ரி­க­ளையும் தேடு­வதில் நாட்டம் காட்டும். அதுவும் குறிப்­பாக மத ரீதி­யாகத் தூண்­டி­வி­டப்­பட்ட ஒரு தாக்­கு­தலின் விளை­வாகப் பேர­னர்த்தம் நிகழ்ந்தால் அந்த பெரும்­பான்­மை­வாத உணர்வு மேலும் தீவி­ர­ம­டையும். ஆனால் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ரான ஆவேசம் செல்­வாக்கு மிக்க சில பிரி­வி­னரால் முஸ்­லிம்­களை நோக்­கிய வெறுப்­பா­கவும், பீதி­யா­கவும் மாற்­றப்­பட்­டி­ருப்­பது இலங்­கையின் துர­திஷ்­ட­மாகும்.

நாட்டின் இரு பிர­தான தேசிய அர­சியல் கட்­சி­களைச் சேர்ந்த ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் தற்­போ­தைய அர­சியல் நிலை­வ­ரத்தின் மீது சில பௌத்த பிக்­குமார் தங்­க­ளது அள­விற்கு ஒவ்­வாத முறையில் செல்­வாக்குச் செலுத்­து­வ­தற்கு எதி­ராக உறு­தி­யான ஒரு நிலைப்­பாட்டை எடுக்­க­வில்லை. 

வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்­களைப் பலர் கண்­டிக்­க­வு­மில்லை. ஆனால் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­த­தாக தனது அமைச்­ச­ரவை சகாக்­களில் ஒரு­வ­ருக்கு எதி­ராகச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டைக் கண்­டித்­த­துடன், இன மற்றும் மத வெறுப்­பு­ணர்வைத் தூண்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்ற அர­சி­யல்­வா­திகள், மதத்­த­லை­வர்கள், ஊடாக நிறு­வ­னங்­களைக் கடு­மை­யாகத் துணிச்­ச­லுடன் சாடினார்.

முஸ்லிம்கள் கணிசமானளவில் வாழும் சில பகுதிகளில் கடந்த மாதம் வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அந்த சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காட்டும் ஒருங்கிணைந்த திட்டமிட்ட பிரசாரமொன்று இப்போது உக்கிரமாக முன்னெடுக்கப்படுகிறது. சிங்களப் பெண் களை வஞ்சகத்தனமான முறையில் முஸ் லிம் வைத்தியர்கள் மலடாக்கினார்கள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரசாரத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. நாசகா ரத்தனமான உள்நாட்டுப் போரொன்றி லிருந்து விடுபட்டிருக்கும் இலங்கை, இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் ஒப்புரவான ஒழுங் கொன்றைத் தோற்றுவிப்பதிலும் கவனத் தைச் செலுத்த வேண்டியது அவசிய மாகின்றது. சமூகங்களுக்கிடையிலான மோதல் இலங்கைக்கு மேலும் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58