பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் பல சாட்சியங்களை போட்டுடைத்த பூஜித - வாக்கு மூலத்தின் முழு விபரம்

Published By: Vishnu

07 Jun, 2019 | 09:53 AM
image

(ஆர்.யசி)

தற்­கொலை குண்டு  தாக்­குதல் நடக்கும் தினத்­தன்று  காலை­யிலும், அதற்கு முன்­னைய தின­மான 20 ஆம் திகதி மாலையும் தாக்­குதல் குறித்த அறி­விப்பு எனக்கு கிடைத்­தது. ஆனால் எவ்­வா­றான தாக்­குதல் என உறு­தி­யாக தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் இருந்தும் என்னை நீக்­கி­விட்டு அதி­கா­ரி­களின் தொடர்­பையும் துண்­டித்­து­விட்டு என்னை பொறுப்­பா­ளி­யாக்க முயற்­சிப்­பது தவ­றா­னது என்று கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர நேற்று   பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.

 

தாக்­குதல் குறித்த தவ­றுக்­கான பொறுப்பை என்னால் ஏற்­று­கொள்ள முடி­யாது.  நீங்கள் பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு பதவி துறந்தால், உங்­க­ளுக்கு தூதுவர் பத­வியை வழங்கி உங்­களின் பெய­ரையும் காப்­பாற்­று­கின்றேன் என ஜனா­தி­பதி என்­னிடம் வலி­யு­றுத்­தினார் எனவும் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின்  விசா­ரணை நேற்று பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் நடத்­தப்­பட்­டது. இதில் நேற்­றைய தினம் சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்ட கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­த­ர­விடம் தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவற்றை தெரி­வித்தார். 

அவர் மேலும்  சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

என்னை பொலிஸ்மா அதி­ப­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பரிந்­து­ரைத்து அர­சியல் அமைப்பு சபையின் மூல­மாக நிய­மிக்­கப்­பட்டேன். நான் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு நேர­டி­யாக பொறுப்­புக்­கூற வேண்­டிய கடை­மையில் ஈடு­பட்டேன். அரச புல­னாய்வு பிரி­வுக்கு நான் கட்­ட­ளை­களை பிறப்­பிக்க முடி­யாது. எதுவும் கூற வேண்டி இருப்பின் அதனை தெரி­வுக்க முடியும். அதனை நிறை­வேற்­று­வதும் நிரா­க­ரிப்­பதும் அவர்­களின் விருப்பம் என்றே இருந்­தது. 

2018 அக்­டோபர் 23 இற்கு பின் பாது­காப்பு குழுக்­கூட்­டத்­திற்கு செல்­ல­வில்லை

நான் பொலிஸ்மா  அதி­ப­ராக கட­மை­யாற்­றிய காலத்தில் ஆரம்­பத்தில் பாது­காப்பு குழுக் கூட்­டங்­க­ளுக்கு சென்றேன். எனினும் 2018 அக்­டோபர் மாதம் 23 ஆம் திக­தியில் இருந்து என்னை பாது­காப்பு குழுக் கூட்­டங்­க­ளுக்கு கலந்­து­கொள்ள வேண்டாம் என ஜனா­தி­பதி நேர­டி­யாக அறி­வித்­த­தாக அப்­போ­தைய பாது­காப்பு செய­லா­ள­ரக இருந்த கபில வைதி­ய­ரத்ன  கூறினார்.  

ஏன் என நான் அவ­ரிடம்  வின­வினேன். என்­மீ­துள்ள அவ­நம்­பிக்கை கார­ண­மாக என்னை கலந்­து­கொள்ள அனு­ம­திக்க வேண்டாம் என ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கலாம். அதில் இருந்து தாக்­குதல் நடக்கும் வரையில் நான் பாது­காப்பு குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வில்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் அடுத்த பாது­காப்பு குழுக் கூட்­டத்­திற்கு நான் சென்றேன். 

புல­னாய்வு அறிக்கை கிடைத்­தது

எனினும்   சம்­ப­வத்தை அடுத்து இந்த சம்­ப­வத்­திற்கு பொலிஸ்மா அதிபர் மட்டும் தான் பொறுப்பு என்ற வகையில் குற்­றச்­சாட்­டுக்கள் என்­மீது திருப்­பப்­பட்டு விட்­டன. இது­வ­ரையில் இது குறித்து நான் வாய் திறக்­காது உள்ளேன். எனது சில கடமை பொறுப்­புக்கள் கைவி­டப்­பட்­டுள்­ளதை நானும் ஏற்­று­கொள்­கின்றேன். ஆனால் நான் மட்­டுமே பலிக்­கடா ஆக­மு­டி­யாது. குறித்த உள­வுத்­துறை அறிக்கை 9 ஆம் திகதி எனது கைக­ளுக்கு கிடைத்­தது. இரண்டு கடி­தங்கள் கிடைத்­தன. தேசிய புல­னாய்வு பணிப்­பாளர் மூல­மாக ஒரு கடி­தமும், சிசிர மென்டிஸ் மூல­மாக ஒரு கடி­தமும் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இரண்டு கடி­தங்­களில் இருந்த கார­ணி­களும் ஒன்­றாக இருக்­க­வில்லை. ஒன்றில் தாக்­குதல் நடக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் ஆனால் உறு­தி­யில்­லாத வகை­யிலும் இருந்­தது. மற்­றைய கடி­தத்தில் தாக்­குதல் குறித்து சில கார­ணிகள் கூறப்­பட்­டி­ருந்­தன. எனினும் 9 ஆம் திகதி புல­னாய்வு மீளாய்வு  கூட்­டத்தில் இதற்கு  முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­ட­வில்லை.   எனக்கு கிடைத்த கடி­தத்தை நான் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பினேன். 

பாது­காப்பு செய­லா­ள­ரிடம் நான் இது குறித்து வின­வினேன். ஜனா­தி­ப­திக்கு அறி­யத்­தந்­த­தாவும், ஏற்­க­னவே ஜனா­தி­பதி இதனை அறிந்­துள்­ள­தா­கவும் அவர் செய­லா­ள­ருக்கு தெரி­வித்­த­தா­கவும் என்­னிடம்  கூறினார்.   என்­னையும் பாது­காப்பு கூட்­டங்­க­ளுக்கு வர­வேண்டாம் என ஜனா­தி­பதி கூறி­யி­ருந்த கார­ணத்­தி­னாலும் ஜனா­தி­ப­திக்கும் எனக்கும் இடையில் நேரடி தொடர்பு இல்­லாத கார­ணத்­தி­னாலும் நான் இது குறித்து வினவ முயற்­சிக்­க­வில்லை. 

அது­மட்டும் அல்ல ஏப்ரல் 18 திகதி, 19 ஆம் திகதி 20 ஆம் திகதி மூன்று அறிக்­கைகள் எனக்கு கிடைத்­தன. அவற்றில் இந்த தாக்­குதல் குறித்து எந்த அறி­விப்பும் விடுக்­கப்­ப­ட­வில்லை. அவற்றில் ஒரு கடி­தத்தில் காத்­தான்­கு­டியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு குறித்து குறிப்­பி­டப்­பட்­டது. ஆனால் தற்­கொலை தாக்­குதல் நடத்தும் திட்­டங்கள் குறித்து எதுவும் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளினால் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அது­மட்டும் அல்ல குறித்த தகவல் தொடர்பில் புல­னாய்வு விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன  என குறிப்­பி­டப்­பட்­டதால் அவற்றில் என்னால் தலை­யிட முடி­யாது. 

பொலிஸ் மா அதிபர் புல­னாய்வு தக­வல்­களை ஜனா­தி­ப­தி­யிடம் பரி­மாறும் ஏற்­பாடு இருக்­க­வில்லை. தேசிய புல­னாய்­வுத்­துறை பணிப்­பாளர் நேர­டி­யாக அந்தத் தக­வல்­களை ஜனா­தி­ப­தி­யிடம் வழங்கி வந்தார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் புல­னாய்வுத் தக­வல்கள் எத­னையும் ஜனா­தி­ப­தி­யிடம் கூறினால். அதை புல­னாய்­வுத்­துறை பணிப்­பாளர் நிலந்த ஏற்­க­னவே தன்­னிடம் கூறி­விட்டார் என ஜனா­தி­பதி சொல்லு வார் என பாது­காப்பு செய­லாளர் என்­னிடம் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இரண்டு தொலை­பேசி அழைப்­புக்கள்

எனினும் 20 ஆம் திகதி பிற்­பகல் 6 மணியில் இருந்து  8 மணிக்குள் எனக்கு தேசிய புல­னாய்வு அதி­கா­ரி­யிடம் இருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு கிடைத்­தது. நாளைய தினம் 21ஆம் திகதி ஏதோ அசம்­பா­விதம் இடம்­பெ­று­வ­தாக தகவல் கிடைத்­துள்­ள­தாக அதில்  தெரி­விக்­கப்­பட்­டது. அது என்ன என்­பது தெளி­வாக கூறப்­ப­ட­வில்லை. பின்னர் அன்றே பாது­காப்பு செய­லாளர் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இவ்­வாறு ஒரு சம்­பவம் குறித்து அறி­யக்­கி­டைத்­ததா என வின­வினார். எனினும் அப்­போதும்  என்ன சம்­பவம் என்ற தெளி­வான தகவல் இருக்­க­வில்லை. இந்த புல­னாய்வு தக­வல்கள் குறித்து பிரதி பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கு அறி­வித்தேன்.  உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வுக்­கு­மாறு பணித்தேன். அவ­ச­ர­கால சட்டம் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. ஊர­டங்­குச்­சட்டம் பிறப்­பிக்க எனக்கு அதி­காரம் இல்லை. அடுத்த நாள் காலை அதா­வது 21 ஆம் திகதி காலையில் 6 மணியில் இருந்து 7.45 மணிக்குள் மீண்டும் தொலை­பேசி அழைப்பு வந்­தது. இன்­றைய தினம் ஏதோ அசம்­பா­விதம் இடம்­பெ­ற­வுள்­ளது என அதில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் எங்கு யார் என்ற எதுவும் எமக்கு தெரி­ய­வில்லை. உட­ன­டி­யாக தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எனக்கும் இருக்­க­வில்லை. 

எனினும் என்னை குற்றம் சுமத்தும் அனை­வ­ரி­டமும் நானும் கேள்வி கேட்க வேண்டும். என்னை பாது­காப்பு குழுவில் இருந்து வெளியேற்­றி­விட்டு, எனக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் தொடர்­பு­களை துண்­டித்­து­விட்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திக­தியில் இருந்து தாக்­குதல் நடக்கும் வரையில் பாது­காப்பு குழுக் கூட்­டத்தில் என்ன முடிவு எடுக்­கப்­பட்­டது.  புல­னாய்­வுத்­து­றையும் உள­வுத்­து­றையும் பாது­காப்பு அமைச்சும் இரா­ணுவ புல­னாய்­வுத்­து­றையும் ஏனைய அதி­கா­ரி­களும் என்ன செய்­தனர்?  எனக்கு கிடைத்த தகவல் பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் வழங்­கப்­பட்­டது. ஏன் உட­ன­டி­யாக பாது­காப்பு குழுக் கூட்­டத்தை கூட்டி உட­ன­டி­யாக ஏன் தீர்­மானம் எடுக்­க­வில்லை? 

பொறுப்­பி­லி­ருந்து தப்­பிக்­க­மு­டி­யாது

அது­மட்டும் அல்ல கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தவ்ஹித் ஜமாஅத் குறித்து தக­வல்கள் கிடைத்­தன. அப்­போது நானும், நாலக டி சில்­வாவும் மூன்று தட­வைகள் ஜனா­தி­ப­தியை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து உரிய கார­ணிகள் குறித்து தெளி­வு­ப­டுத்­தினோம். ஆகவே எவரும் பொறுப்­பு­களில் இருந்து தப்­பிக்க முடி­யாது. எனினும் இவை நடந்து முடிந்­து­விட்­டன. தாக்­குதல் நடந்த பின்னர்  23 ஆம் திகதி பாது­காப்பு சபை அவ­ச­ர­மாக கூடி­யது. பின்னர் 24 ஆம் திகதி காலையில் ஜனா­தி­பதி என்னை தொடர்­பு­கொண்டு என்னை சந்­திக்க வேண்டும் என கூறினார். நான் சந்­தித்தேன். 

அப்­போது அவர் கூறி­ய­தா­னது " நடந்த சம்­ப­வங்­க­ளுக்கு என்னால் பொறுப்பை ஏற்­று­கொள்ள முடி­யாது. எனக்கு இது அறி­யத்­த­ராத விடயம். ஆகவே நீங்கள் தவறை ஏற்றுக்கொண்டு பதவியை துறக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நீங்கள் தான் குற்றவாளி என்று முடிவு வரும். ஆகவே நீங்கள் பதவி துறந்தால் உங்களின் மீதுள்ள அவப்பெயரை நீக்கிவிடுவதுடன் வெளிநாடு ஒன்றுக்கான தூதுவராக உங்களை நியமிக்கின்றேன்.  ஆகவே நீங்கள் குற்றவாளியாகி தண்டனையை பெற்று ஓய்வூதியமும் இல்லாது வீடு செல்ல போகின்றீர்களா அல்லது பதவியை துறந்து  சலுகையுடன் செல்கின்றீர்களா என்பதை நீங்கள் தீர்மானித்து எனக்கு கூறுங்கள்"என்றார். 

எனினும் நான் மௌனமாக இருந்தேன். அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பதிலை கேட்டார். "என்ன இன்னமும் உங்களின் கடிதம் எனக்கு வரவில்லை" என கேட்டார். அப்போதும் நான் பதில் தெரிவிக்கவில்லை. அவரது பொறுமைக்கும் எல்லை இருக்கும் தானே?  ஆகவே பொறுமையிழந்து என்னை கட்டாய விடுமுறையில் அனுப்பிவிட்டார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53