முடிவை மாற்றியமைத்தார் மிட்செல் ஸ்டாக்!

Published By: Vishnu

06 Jun, 2019 | 11:10 PM
image

மிட்செல் ஸ்டாக்கின் அபாரமான பந்து வீச்சினால் அவுஸ்திரேலிய  அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 15 ஓட்டத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ண தொடரின் 10 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கிடையிலும் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றது.

289 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் விக்கெட் 7 ஓட்டத்துக்குள் வீழ்த்தப்பட்டது. அதன்படி 1.4 ஆவது ஓவரில் லிவீஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அதிரடிகாட்ட ஆரம்பித்த கிறிஸ் கெய்லும் 4.5 ஆவது ஓவரில் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 31 ஓட்டத்துக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக நிகோலஷ் பூரண் மற்றும் ஷெய் ஹோப் கை கோர்த்து அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாடினர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 54 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் நிறைவில் 78 ஓட்டத்தையும் பெற்றனர். இந் நிலையில் 19.1 ஆவது ஓவரில் நிகோலஷ் பூரண் 40 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிம்ரன் ஹேட்மேயரும் சற்று நேரம் நிலைத்தாடி  34 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 21 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் (190-5).

ஆறாவது விக்கெட்டுக்காக ரஸல் களமிறங்கி அதிரடி காட்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது எனினும் ரஸல் 38.5 ஓவரில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, பிரித்வெய்ட் களமிறங்கினார்.

40 ஓவர்களின் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றிருக்க, வெற்றிக்கு 60 பந்துகளில் 66 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்திளத்தில் அணித் தலைவர் ஹோல்டர் 37 ஓட்டத்துடனும் பிரித்வெய்ட் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 43.4 ஆவது ஓவரில் ஹோல்டர் 50 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசியதுடன் அந்த ஓவரின் முடிவில் மேற்கிந்தியத்தீவுள் அணியும் 243 ஓட்டங்களை எடுத்தது.

46 ஆவது ஓவருக்காக மிச்செல் ஸ்டாக் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் பிரத்வெய்ட் 16 ஓட்டத்துடனும் இறுதிப் பந்தில் ஹோல்டர் 51 ஓட்டத்துடனும்  ஆட்டமிழந்தார் (252-8).

இதனால் வெற்றியின் வாய்ப்பி அவுஸ்திரேலிய அணிப் பக்கம் திரும்பியது. 9 ஆவது விக்கெட்டுக்காக அஷ்லி நர்ஸ் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் ஜோடி சேர்ந்தாட மேற்கிந்தியத்தீவுகள் அணி 47 ஓவர்களின் முடிவில் 255 ஓட்டங்களை பெற்றதுடன் வெற்றிக்கு 18 பந்துகளுக்கு 34 ஓட்டம் என்ற நிலை இருந்தது.

எனினும் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுது. இதனால் அவுஸ்திரேலிய அணி 15 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

பந்து வீச்சில் மிட்செல் ஸ்டாக்ஸ் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும், சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photo credit : ICC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35