ஜனாதிபதியே எனக்கு அழுத்தங்களை கொடுத்தர் - புதிய தகவலை வெளியிட்ட பூஜித

Published By: Vishnu

06 Jun, 2019 | 09:52 PM
image

(ஆர்.யசி)

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அழுத்தங்களை கொடுத்தார், இது குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் முரண்பட்ட காரணத்தினால் என்னை பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இருந்து நீக்கினர் என  கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் 

பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நான் பங்குபற்றக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்ததாக எனக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவித்ததை அடுத்து நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. என்மீது இருந்த அவநம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் இறுதியாக ஒரு பாதுகப்புக் கூட்டத்தில்   11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் அரச புலனாய்வு அதிகாரி நிஷாந்த டி சில்வா விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவர் அந்த விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் ஜனாதிபதியும் தெரிவித்தனர். 

எனினும் எனக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இது குறித்து நான் காரணிகளை எழுப்பினேன். எனினும் என்னை கடமையை செய்ய பணித்தனர். 

எனவே கட்டயதனின் பெயரில் நான் அதற்கு இணங்கினேன். பின்னர் அது நடக்கவில்லை. ஆனால் நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்ற காரணி இதன் பின்னரே எழுந்தது. ஜனாதிபதியே என்னை பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என பணித்தார் என அவர் சாட்சியமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50