நெருக்கடியில் இருந்து நாடு விடுபட 'ஒரே தேசம் ஒரே குரல்" ; 6 அம்ச திட்டம் 

Published By: Daya

06 Jun, 2019 | 05:12 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் இருந்து விடுபடவும், அனைத்து இனத்தவர்களை ஒன்றிணைக்கவும் தற்போதைய மற்றும் எதிர்கால ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்தவும் 'ஒரே தேசம் ஒரே குரல்" என்ற அமைப்பு 06 அம்சங்களை உள்ளடக்கிய மகஜரில் மக்களின் கையொப்பத்தினை பெறுவதற்கான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ரிலியம் ஹேட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜானக ரத்னாயக்க கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டுமக்களுக்கு தமது தனிப்பட்ட பாதுகாப்பு , நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை தணிப்பதற்கு அனைத்து மதகுருமார்களும் தமது பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்ததுடன் எதிர்காலத்தில் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான பல்வேற யோசனைகளை முன்வைத்திருந்தனர்.  

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுத்தவும் தற்போதைய, எதிர்கால ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்தவும் 06 அம்சக் குறிக்கோள்களை உள்ளடக்கிய மகஜரை உருவாக்கியுள்ளோம். 

01.ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி ஆகிய வேற்றுமைகளுக்கு அப்பால் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டமுறைமையை உருவாக்கல்.

02.இலங்கையில் தற்போது காணப்படும் இன, மத, மொழியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல்.

03.தேசிய பாதுகாப்பை பிரதானமாக கொண்ட பொதுவான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான அரசியல் வழிமுறைகளை செயற்படுத்தல்.

04.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து அரசியல் வாதிகளையும் சாதாரண மனிதர்களாக பார்த்தல் மற்றும் அவர்கள் சம்பந்தமாக ஒரு பொதுவான ஒழுங்கு விதிகளை உருவாக்கல்.

05.அனைத்து இலங்கையரினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

06.தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தினை முற்றாக நாட்டில் இருந்து இல்லாதொழிப்பதற்கான அவசியமான சட்டதிட்டங்களை முன்னெடுத்தல் என்ற குறிக்கோள்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த குறிகோள்களை மகஜராகவும், சமூகவலைத்தளங்களின் மூலமாகவும் , பத்திரிகைகள் மூலமாகவும் மக்களுக்கு தெரிவித்து அவர்களின் கையெழுத்துடன் மக்கள் ஆணையாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளோம். இதன் முலமாக மக்கள் இந்த விடயங்களை ஏற்றுக்கொனண்டுள்ளனர் என்பதனை அரசாங்கத்திற்கு உணர்த்தி மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்.

இலங்கையில் பிரச்சினைகள் காலத்திற்கு காலம் தோற்றம்பெற்று வந்துள்ள நிலையில் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் உருவாகாமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்தியா, சீனா, சிங்கபூர் அனைத்த  இன, மத, மொழி மக்களையும் உள்ளடக்கியதான திட்டங்களை முன்னெடுத்து வளர்ச்சியடைந்துள்ளன. 

ஆசியாவின் முத்து என்று அழைக்கப்படும் நம் நாட்டை உலக நாடுகள் கண்காணித்துக்கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலாத்துறையானது மீண்டும் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. இதன் மூலமாக பலர் தமது தொழில் வாய்ப்புக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13