அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை தூக்கி எறிந்து விட்டு தன் மீதான  அரசியல் அடிகள் ஒரு போதும் தன்னை காயப்படுத்தாது என தெரிவித்துள்ள பிரபல நடிகையும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க , நம்பிக்கைக்குறியவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் சரியான இடத்தில் நின்றதாகவும் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

அதி கூடிய விருப்பு வாக்குகள் ஊடாக மக்கள் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள். 

அவர்களுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளேன். 

எவ்விதமான அறிவிப்பும் எனக்கு விடுக்கப்பட வில்லை. நான் 17 வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டேன். 

ஆனால் இன்று அரசியல் அடிகள் என்மீது விழுகின்றன. அவற்றை நான் எதிர் கொள்ளத் தயார். 

மக்கள் என்னுடன் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  கிருலப்பனையில் நடைபெறவுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்வேன் என குறிப்பிட்டார்.