யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை - கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அனந்தி தெரிவிப்பு

Published By: Daya

06 Jun, 2019 | 04:49 PM
image

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லையென கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன் இன்று முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரனை சந்தித்தார்.

குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சோலைவனம் கொட்டலில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக அனந்தி சசிதரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

இறுதி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு எந்தவொரு நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. ரணில் அரசு இன ரீதியில் வெவ்வேறான பார்வையையே கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பிணைமுறி மோசடி உள்ளிட்ட விடயங்கள் மறக்கப்பட்டுள்ளன.

முறிகள் மோசடி தொடர்பில் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்ய முடியாத பாராளுமன்றம் உள்ள நாட்டிலேயே நாம் வாழ்கின்றோம்.

இதேவேளை முறிகள் மோசடியை மூடி மறைத்தவர்கள், அதற்கு துணைபோன அனைவரும் கூட்டுக் களவாணிகள் எனவும் அனந்தி சதிதரன் இதன்போது மேலும் கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மக்னொன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27