தேசிய  ஒற்றுமையை உறுதிப்படுத்த  ஜே.வி.பியின்  விசேட  ஆலோசனைகள் நிகழ்வு 

Published By: R. Kalaichelvan

05 Jun, 2019 | 05:51 PM
image

(ஆர்.விதுஷா)

இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்து  தேசிய  பாதுகாப்பு மற்றும்  பொதுமக்களின்  பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும்  உறுதிப்படுத்தும்  நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி  )யினால் வகுக்கப்பட்ட  விசேட   ஆலோசனைகளை வெளியிடும்  நிகழ்வு  செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம் பெற்றது.

  

ஈஸ்டர்  ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களை போன்று மீண்டும்  இடம் பெறுவதனை  தடுப்பதுடன்,  அதனால்  ஏற்பட்டிருக்கும்  இனவாத  , மதவாத  வன்முறைகளை  தவிர்த்து  கொள்வது  அவசியமானதாகும். ஆகவே நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பி  பொதுமக்களின்  பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதற்கும் ஒரு தேசம் என்ற  வகையில் பின்பற்றப்படவேண்டிய ஆசோசனைகள் அடங்கிய  கையேடு அங்கு  வெளியிடப்பட்டது. 

இதில் பொதுவான மறுசீரமைப்பு ஆலோசனைகள், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில்  ஏற்படுத்தப்படவேண்டிய திருத்தங்கள் சட்டத்தில்  ஏற்படுத்தப்படவேண்டிய  மறு  சீரமைப்புக்கள்,மதநிறுவனங்களின் நிர்வாகத்தின்  மறுசீரமைப்புகள்  என்பன  தொடர்பிலான  யோசனைகள்  எடுத்துரைக்கப்பட்டுள்ளன.  

அத்துடன்,  கல்வி  மற்றும்  ஊடகத்துறைகளில் தேசிய  ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டிய  மாற்றங்கள் மற்றும்மத கல்விமான்களுக்கு இந்த விடயம்  தொடர்பில்   உள்ள  கடமைகள் பொறுப்புக்கள்;  தொடர்பிலும்   ஆலோசனைகள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.  

பொதுவான  மறுசீரமைப்பு  ஆலோசனைகளின் கீழ்  அனைத்து இன மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் வாழும் நாட்டில் இன, மத மற்றும்  பிரதேச  அடிப்படையில்  அரசியல்  கட்சிகளை  ஆரம்பித்தல்   , பதிவு  செய்தல்  ஆகியவற்றை  தடை  செய்யும்  சட்டம்  தயாரிக்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை,  மக்களிடையே  தோன்றும்  நம்பிக்கையின்மையை முற்றாக  ஒழிப்பதற்கு   உண்மையை  கண்டறியும்  ஆணைக்குழு நியமிக்கப்படுவதுடன், இன,மத,சாதி,பால் பேதங்களையும் ஒடுக்கு முறைகளை  தடுப்பதற்காகவும்   பாகுபாட்டுக்கான  ஆணைக்குழு  அமைக்கப்படவேண்டும்  என்பதுடன், அந்த  ஆணைக்குழுவின்  கீழ்   பாரபட்சமான  கையாழுகைகளை  மக்களுக்கு  எந்த  நேரத்திலும்  தெரிவிக்க கூடிய  வகையில்    முரண்பாட்டுக ளுக்கு எதிரான  கண்காணிப்பு  நிலையம்  அனைத்து பிரதேச  சபை  பிரிவுகளிலும்  உருவாக்கப்படவேண்டும்  . என்ற  விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறைமையை கருத்தில் கொண்டும் நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் அரசாங்கத்தின்  தீவிர  கண்காணிப்பின்  கீழ்  செயற்படுத்தப்படுவதுடன்,  மக்கள் பாதுகாப்புக்கு  பங்கம் விளைவிக்கும்  செயற்பாடுகளை   முறியடிக்க  வலுவான  சட்டங்கள்  உருவாக்கப்படவேண்டும்.  

அத்துடன்,  நாட்டில்  சகல பிரஜைகளுக்கும்  பொதுவான  சட்டம்  உருவாக்கப்படுதல்  வேண்டும்.சிறுவர் மற்றும் பெண்கள் சமத்துவம்  மற்றும் அரசியலமைப்பில்  உள்ள  அடிப்படை  உரிமைகளை  பாதுகாக்கும் வகையிலான  திருத்தங்கள்  சட்டத்தில்  மேற்கொள்ளப்படவேண்டும். 

சகல  மதங்களுக்குமான அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  குறித்த மதங்களின் பிரதானிகள் மற்றும் மத கல்விமான்கள் அடங்கிய  மதசபை  அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு  மத நிறுவனங்களை  மேற்பார்வை  செய்வதற்காக  தற்போதிருக்கும் சட்டங்களை  முறையாக  மேற்பார்வை செய்யும் வித்தில் மத நிறுவனங்களின்  நிர்வாகம் மறுசீரமைக்கப்படவேண்டும் எனவும்  கூறப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் அனைத்து இனமதமாணவர்களும் ஒரே பாடசாலையில் ஆரம்பத்திலிருந்து கல்விகற்க ஏற்ற முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதுடன்,இன, மத ஒற்றுமையை வலுவடைய ச் செய்யும்  வகையிலான யோசனைகள் இதன்போது  மக்கள்  மயப்படுத்தப்பட்டது.  

இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ,பிரசார செயலாளர் விஜித  ஹேரத் ,உயர் குழு உறுப்பினர் லால்காந்த ,களனி பல்கலைக்கழகத்தின்  கிறிஸ்தவ  மற்றும்  கலாச்சார  பிரிவின்  சிரேஷ்ட  விரிவுரையாளர்  விஜித ரோஹண,சட்டத்தரணி  எம்.எஸ்.எம். பாரிஸ் சாரி, இலங்கை  மத்திய வங்கியின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் சட்டத்தரணி  நிமலா சிறிவர்த்தன  உட்பட பலரும் கலந்து  கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01