டிரோனின் உதவியுடன் மருத்துவத்துறையை மாற்றியமைக்க முடியும் -  வைத்தியர் கோத்தாபய

Published By: Daya

05 Jun, 2019 | 01:57 PM
image

இப்பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் மிகச் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நாடுகளுள் ஒன்றாக இலங்கை பெயர் பெற்று விளங்குகின்றது. எனினும், அண்மையில் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களை எடுத்துக் கொண்டால், அவசர மருத்துவ உதவிகளை எதிர்பார்த்திருந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மருந்து வகைகளை அவசரமாக விநியோகிக்க வேண்டிய தேவையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றமை புலப்பட்டுள்ளது. 


யாருமே எதிர்பாராத வகையில், சம காலத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள், குருதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து குருதியைப் பெற்றுக் கொண்டு வருவதற்கு வைத்தியசாலைகள் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அவசர குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாட்டில் போதுமான குருதி கையிருப்பில் இருந்த போதிலும் அதனை தேவையான இடத்திற்கு விரைவாக கொண்டு செல்வதில் பாரிய முட்டுக்கட்டைகள் காணப்பட்டன.


மருத்துவ வசதி ஆற்றல்கள் தொடர்பில் உலக வங்கி ஆய்வு செய்துள்ள அனைத்து நாடுகளின் பட்டியலின் கீழ் அரைவாசியில் இலங்கை உள்ளதாக அது தரப்படுத்தப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை, மருந்து வகை மற்றும் மருத்துவம் தொடர்பான சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை சவால்களில் ஒன்றாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதிநவீன மருத்துவ வசதிகள் மீது அரசாங்கம் முதலீடுகளை மேற்கொண்டுள்ள போதிலும் உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அவசர மருத்துவ நிலைமைகளைக் கையாளவும்ரூபவ் அன்றாட அடிப்படையில் அத்தியாவசிய மருந்து வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளை மேம்படுத்தவும் இலங்கையின் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு பாரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

இந்த நெருக்கடியை தீர்க்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவது பல்லாயிரக்கணக்கான மக்களின் அவசர மருத்துவ தேவைகளைப் பாதிப்பதுடன்  பல சந்தர்ப்பங்களில் அநியாயமாக உயிரிழப்பதற்கும் காரணமாகின்றது. ஆகவே இது தொடர்பில் துணிச்சலாக பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான காலம் வந்துவிட்டதென மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். 


தேவையேற்படும் போது டிரோன் சாதனத்தின் மூலமாக விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் இதற்கு உதவும் என பலரும் நம்புகின்றனர்.
மருத்துவ வசதிகள் தொடர்பில் இலங்கை முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதில் வளர்ச்சி கண்டு வருகின்ற பல நாடுகளும் எவ்வாறு மருத்துவ டிரோன் சாதனத்தை விநியோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதையும் இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் கோத்தாபய ரணசிங்க விளக்கியுள்ளார்.


சேவைகள், உட்கட்டமைப்பு, மருத்துவ தொழில்ரீதியானவர்களின் எண்ணிக்கை மற்றும் பல அம்சங்கள் கடந்த ஒரு சில ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான அளவு விஸ்தரிப்படைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும் குறிப்பிட்ட சில அம்சங்கள் தொடர்பில் இன்னமும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன் நாட்டில் தேவையான இடங்களுக்கு மருந்துகள் மருத்துவ சாதனங்கள் மேலும் பல பாகங்கள் போன்ற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துத் தேவை காணப்படுகின்றது. தற்போது அவற்றை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தேவையற்ற உயிரிழப்பைத் தடுத்து, எண்ணற்ற உயிர்களைக் காப்பதற்கு வேகமான மற்றும் திறன் மிக்க வழியில் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குதல் வேண்டும்.


தேவைப்படுகின்ற கிராமப்புறங்களிலுள்ள நோயாளர்களுக்கு மத்திய களஞ்சியத்திலிருந்து மருந்து வகைகளை விநியோகிப்பதிலுள்ள சிரமம், சர்வதேசரீதியாக முக்கியமான மருத்துவ உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதை பாதிக்கின்றது. அதிக அளவில் மருந்துகள் விரயமாதல், செலவுமிக்க அவசர பிரயாணங்கள் மற்றும் உகந்த துணை மருத்துவப் பராமரிப்பு உத்திகள் சுகாதாரத் துறையினரைப் பொறுத்தவரையில் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதன் காரணமாக உயிரைப் காப்பதற்காக போராடுகின்ற மக்களுக்குரூபவ் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான மருந்து வகைகள் கிடைப்பதில்லை.


சர்வதேசரீதியாக காணப்படுகின்ற இப்பிரச்சனைகள் இலங்கையிலும் காணப்படுகின்ற நிலையில், நாட்டில் பிரதான மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடங்கள் அனைத்தும் கொழும்பில் மட்டுமே உள்ளமை முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது


அதனால், நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் சோதனை மாதிரிகள் அம்பியுலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டு, சோதனைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேவையான சரியான மருந்து வகைகள் வெளியிடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இச்செயற்பாட்டிற்கு 24 மணி நேரம் வரையில் செல்வதால்ரூபவ் நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படுகின்றது.
டிரோன் சாதனங்கள் பொதுவாக வர்த்தக, கைத்தொழில், இராணுவ மற்றும் பொழுதுபோக்கு தேவைகளுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

மருத்துவத் துறைக்கும் டிரோன் சாதனங்களின் பாவனையை விஸ்தரிப்பது, உலகில் பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும். ஒப்பீட்டளவில் இலங்கை சிறு அளவு கொண்டதாக இருப்பினும் சரியான போக்குவரத்து வசதிகளற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள பிரதேசங்கள் இன்னமும் காணப்படுகின்றன. தரை வழிப் போக்குவரத்தானது நேரத்தையும் பணத்தையும் விரயப்படுத்துகின்றது. ஆகவே, இதற்கு பொருத்தமான தீர்வாக டிரோன் சாதனங்கள் காணப்படுகின்றன.


பல நாடுகளிலும் சிறந்த பலாபலன்களை வழங்கியுள்ள ஒரு புதிய தொழில்நுட்பமாக மருத்துவ டிரோன் விநியோக சேவை காணப்படுகின்றது. தேவைப்படும் சமயங்களில் நாட்டின் எப்பகுதிக்கும் தடுப்பூசிகள், குருதி மற்றும் உயிர் காப்பு மருந்து வகைகளை அவசரமாக விநியோகிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்ற டிரோன் சாதனங்களை உபயோகிக்கின்ற மருத்துவ டிரோன் விநியோக சேவையானது புரட்சிகரமான ஒரு புதிய சேவையாக அமைந்துள்ளது. 
விநியோக நடவடிக்கைகளை திறன்மிக்க வழியில் உரிய நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விநியோக மையங்களில் பல்வேறு டிரோன் சாதனங்களுடன், இச்சேவை 24 மணி நேரமும் வழங்கப்பட முடியும்.


கானா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான வைத்தியசாலைகளுக்கு மருத்துவ டிரோன் சாதனங்களின் சேவை கிடைக்கப்பெறவுள்ளதுடன் தேவைப்படும் சமயங்களில் 22 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் மருந்து வகைகளை உடனடியாக விநியோகிக்க முடிவதுடன், இதன் மூலமாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் பல மில்லியன் கணக்கான உயிர்களை காக்கவும் முடியும்.

டிரோன் மூலமாக விநியோகிக்கப்படுகின்ற உற்பத்திகள் மூலமாக எவ்விதமான மருந்தும் தீர்ந்து போய் விடவில்லை என்பதையோ அல்லது அனைத்து உற்பத்திகளுக்கும் காலாவதி திகதி கிடையாது என்பதையோ இன்று உலகில் உரத்துக்கூறக்கூடிய ஒரேயொரு நாடாக ருவாண்டா திகழ்ந்து வருகின்றது. இலங்கையின் மருத்துவத் துறையும் முன்னேற்றம் காண்பதற்கு மத்திய களஞ்சியமும் குறித்த நேரத்தில் இடம்பெறும் விநியோக நடவடிக்கையுமே சரியான தீர்வுகள் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.


மருத்துவத் துறையினர் தமக்கு தேவையான மருந்து வகைகளை செய்தி வடிவில் அனுப்பி வைத்து, ஒரு சில மணி நேரத்தினுள் குறிப்பாக சில சந்தர்ப்பங்களில் ஒரு மணித்தியாலத்திற்குள் அவற்றைப் பெற்றுக்கொள்வதை நாம் அவதானித்துள்ளோம். டிரோன்கள் தமது சேவைகளை வழங்கும் மருத்துவ சிகிச்சை மையங்களில் எவ்விதமான மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளுமின்றி, விநியோக மையங்களிலிருந்து வெளிக்கிளம்பி, மீண்டும் தரையிறங்கிக் கொள்ள முடியும்.

இந்த டிரோன் சாதனங்கள் தன்னியக்க முறையில் பறப்பதுடன் 2 கிலோ வரையான பொருட்களை சுமந்து செல்லும் அதேசமயம், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியவை. ஆகவே ஒவ்வொரு விநியோக மையத்தின் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்கான விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். விநியோக நடவடிக்கை வான்வழியாக மேற்கொள்ளப்படுவதுடன், தரைமட்டத்திற்கு மேல் பாதுகாப்பான உயரத்திற்கு டிரோன் கீழிறங்கி வந்து, அது விநியோகத்தை மேற்கொள்கின்ற மருத்துவ மையத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மருந்துப் பெட்டியை பரசூட் மூலமாக தரையிறக்குகின்றது.


இந்த புத்தாக்கத்தின் மூலமாக பல முக்கியமான நன்மைகள் கிட்டுகின்றன. கையிருப்பு தீர்ந்து போகும் பிரச்சினைக்கு இவை தீர்வாக அமைவதுடன் நாட்டிலுள்ள அனைத்து மருத்துவ சிகிச்சை மையங்களிலும் கையிருப்பிலுள்ள மருந்துப் பொருட்கள் தீர்ந்து போகாது. குளிரூட்டி உடைந்து போதல் அளவுக்கதிகமான கையிருப்பு தேவைகளை சரியாக எதிர்வுகூற முடியாமை போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் பல மருந்துகள் காலாவதியாகும் நிலைமைகளைப் போக்கவும் இது உதவுகின்றது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதைப் போன்ற நிலைமைகளில் அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும் இத்தொழில்நுட்பம் உதவுகின்றது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் கொழும்பிலுள்ள மூன்று வைத்தியசாலைகளிலும் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்ட போது, நாட்டின் ஏனைய பாகங்களில் போதுமான அளவு குருதி கையிருப்பில் இருந்தது. ஆயினும் அதனை அவசரமாக கொழும்பிற்கு எடுத்துவர வேண்டிய தேவை காணப்பட்டது. கிடைக்கப்பெறும் குருதியின் ஒட்டுமொத்த தரமும் இதன் மூலமாக மேம்படுத்தப்படும்.

குருதி கிடைக்கப்பெறுவதை மேம்படுத்துவதற்கு பல்வேறு இரத்த வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், குருதியின் தரம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இத்தொழில்நுட்பமானது குருதிப் பரிசோதனை மற்றும் விநியோக நடவடிக்கைளை மத்திய தொழிற்பாடாக மாற்றியமைத்து கிடைக்கப்பெறுகின்ற வழிமுறைகளை மேம்படுத்துவதற்கு குருதி வழங்கல் சேவைக்கு இடமளிக்கின்றது.


இருதய நோயாளிகளுக்கும் இத்தொழில்நுட்பம் பேருதவியாக அமையும். கிராமப்புற வைத்தியசாலையிலுள்ள நோயாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற சமயத்தில் முடிந்த வரை விரைவாக அவருக்குரிய சிகிச்சை நடவடிக்கைளை முன்னெடுத்தல் வேண்டும். அந்த நோயாளரின் உயிரைக் காப்பதில் முதல் ஒரு அல்லது இரு மணி நேரம் மிகவும் முக்கியமானது. எனினும் தேவையான மருந்து கையிருப்பில் இல்லாமல் கொழும்பிலிருந்தே அதனை தருவிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்ற போது அதனை விரைவாக தரை வழியாக பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, அந்த நோயாளரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முடிந்த வரை விரைவாக வைத்தியசாலைக்கு மருந்தை தருவிப்பதற்கு மிகவும் உகந்த தீர்வாக டிரோன்கள் காணப்படுகின்றன.


மேலும், தொலைமருத்துவ தொடர்பாடலுக்கும் டிரோன் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். அனர்த்தம் இடம்பெற்றுள்ள இடங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விசேட உபகரணத்தை அனுப்பி வைத்து, தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக மத்திய நிலையத்திற்கும், அனர்த்தம் இடம்பெற்றுள்ள இடத்திற்கும் இடையில் தொடர்பாடல் இணைப்பொன்றை ஸ்தாபித்துக் கொள்ள முடியும். மருத்துவ தேவைகளுக்கும் அப்பால் காடழிப்பு, பல்வேறு செயற்திட்டங்களின் மூலம் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் இலங்கையில் மனிதனுக்கும்-யானைக்கும் இடையிலான பிணக்கு போன்ற விலங்குகளின் நடமாட்டங்கள் போன்ற விடயங்களுக்கும் கண்காணிப்பு சாதனமாக டிரோன் சாதனங்களை உபயோகிக்க முடியும்.

மதிப்பீடுகள் மற்றும் உரிய தீர்வுகளை மனிதர்கள் நேரே சென்று மேற்கொள்ள முடியாத வகையில் தொழிற்சாலை கசிவுகள் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் போன்ற இரசாயன அல்லது உயிரியல் அனர்த்தங்களுக்கும் இவற்றை உபயோகிக்க முடியும்.

சனத்தொகை அதிகரித்துச் செல்லும் நிலையில் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசாங்கங்களின் மீதான அழுத்தமும் அதிகரிக்கின்றது. நிதியுதவிகள் மூலமாக புதிய வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு, ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், விரயத்தைக் குறைத்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு நோயாளர்களுக்கான வசதிகளை அதிகரிப்பதற்காக புதிய மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் மீது முதலீடு செய்யும் முயற்சிகள் சிறு அளவிலேயே காணப்படுகின்றன. 


நாட்டின் மருத்துவ விநியோகச் சங்கிலியை சிறப்பாக மாற்றியமைப்பதற்கு உதவும் சாத்தியத்தை மருத்துவ டிரோன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. ஏனைய பல்வேறு துறைகளில் டிரோன் தொழில்நுட்பம் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், உலகில் அடுத்த படியாக மருத்துவத் துறைக்கும் இதனை விஸ்தரித்து, அதன் மூலமாக எதிர்வரும் காலங்களில் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04