பாடசாலை மாணவியொருவர்  தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.