கொழும்பு துறைமுகத்தில் பணியுரியும் 10 ஆயிரம் ஊழி­யர்­களின் தொழில் பறி­போகும் அபாயம்  - அநுரகுமார

Published By: Digital Desk 3

05 Jun, 2019 | 01:12 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு இறங்­கு­து­றையை வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கு­வதால் துறை­மு­கத்தில் பணி புரியும் 10ஆயிரத்துக்கும் அதி­க­மான ஊழி­யர்­களின் தொழில்­வாய்ப்பு இல்­லா­மல்­போகும் அபா­ய­முள்­ளது. இது­தொ­டர்பில் அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன? என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நிலை­யி­யற்­கட்­டளை 27/2 இன் கீழ் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,கொழும்பு துறை­மு­கத்தின் முக்­கி­ய­மான தொகு­தி­யான பாரி­ய­ளவில் கப்­பல்கள் வந்து நிறுத்­தும்­வ­கையில் 2015இல் புதுப்­பிக்­கப்­பட்­ட­து­மான, இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பைக்கு சொந்­த­மான கிழக்கு இறங்­கு­து­றையை இந்­தியா மற்றும் ஜப்­பா­னுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் கடந்த 28ஆம் திகதி புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த இறங்­கு­து­றையை இலங்கை துறை­முக அதி­கா­ர­சபை கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வங்­கியின் 80 டொலர் மில்­லியன் கடன் தொகையைப் பெற்று புதுப்­பித்­தி­ருந்­தது.

இறங்­கு­து­றையின் வேலைத்­திட்­டத்தை நிறை­வு­செய்த பின்னர், அதன் மூலம் லாப­மீட்டும் நட­வ­டிக்கை தொடர்­பாக துறை­முக தொழிற்­சங்­கங்­க­ளினால் அர­சாங்­கத்­துக்கு பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் அர­சாங்கம் அந்த பிரே­ர­ணைகள் எத­னையும் கருத்­திற்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக இந்த பிரே­ர­ணை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முன்னாள் துறை­முக அமைச்­ச­ரினால் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்த பிரே­ரணை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் இதனை அர­சாங்கம் இர­க­சி­ய­மாக  இரண்டு நாடு­க­ளுக்கு வழங்க தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. கடந்த 28ஆம் திகதி அவ­ச­ர­மாக இந்­திய உயர் ஸ்தானிகர், ஜப்பான் தூதுவர் மற்றும் துறை­முக அமைச்சர் ஆகி­யோ­ரினால் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் மூலம் அதன் நிர்­வாகம் அந்த நாடு­க­ளுக்கு உரித்­தா­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­திய தேர்தல் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் மோடி மீண்டும் பிர­தமர் பத­விக்கு வரு­வது உறு­தி­யான நிலையில் இந்­தி­யாவின் அழுத்­தத்தின் பின்­ன­ணி­யி­லேயே அர­சாங்கம் இந்த அவ­சர புரிந்­து­ணர்­வுக்கு வர தீர்­மா­னித்­தது.  புதிய லிப­ரல்­வாத பொரு­ளா­தார முறை­மையை முன்­னுக்கு கொண்­டு­செல்ல,  எந்த பெய­ரி­லேனும் இயற்கை வளம் மற்றும் அரச சொத்­துக்­களின் உரி­மை­களை விட்­டுக்­கொ­டுப்­ப­தன்றி அர­சாங்­கத்­துக்கு வேறு வழி­யில்லை.

கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு இறங்குதுறையை வெளி­நாட்­டுக்கு வழங்­கு­வதன் மூலம் துறை­மு­கத்தில் பணி புரியும் சுமார் 10ஆயிரம் ஊழி­யர்­களின் தொழில் இல்­லா­மல்­போகும் அபாயம் இருப்­ப­தாக தொழிற்­சங்­கங்கள் குற்றம் தெரி­விக்­கின்­றன. கொழும்பு துறை­முகம் போன்றே பொரு­ளா­தார கேந்­திர நிலை­யங்­களை அரச உரி­மையை விட்­டு­வி­டு­வது நாட்டின் பொரு­ளா­தார சுயா­தீனத் தன்­மையை காட்­டிக்­கொ­டுப்­ப­தாகும்.

சீனா கொழும்பு துறை­மு­கத்­துக்கு நெருக்­க­மாக நிலை­கொண்­டுள்­ளதால் இந்­தி­யா­வுக்கும் அங்கு நிலை கொள்ள வேண்­டிய பாரிய தேவை இருப்­பது தெளி­வா­கின்­றது. அரசாங்கம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் மூலம், முன்னர் இருந்த நிலைமையிலிருந்து விலகி தரகுப்பணம் எடுப்பதாக தெரிவிக்க முடியும். குறிப்பாக நாட்டு மக்களின் கவனம் வேறு திசைக்கு சென்றிருக்கும் நிலையில் அரசாங்கம் மக்களுக்கு இரகசியமாக அவசரமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு சென்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47