கார்டீப் மைதானத்தில் இலங்கை பெற்ற முதல் வெற்றி!

Published By: Vishnu

05 Jun, 2019 | 12:47 PM
image

இங்கிலாந்தின் கார்டீப் மைதானத்தில் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்றைய தினம் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று கார்டீப் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இதுவே இந்த மைதனாத்தில் இலங்கை அணி பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முதல் வெற்றியாகும்.

இதற்கு முன்னர் கார்டீப் மைதானத்தில் ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியானது 5 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியிருந்தது. அது மாத்திரமன்றி கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தது.

இந் நிலையில் இம் மைதானத்தில் நேற்றைய தினம் 6 ஆவது ஒருநாள் போட்டியை எதிர்கொண்ட இலங்கை  அணி ஆப்கானிஸ்தனை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கார்டீப் மைதானத்தில் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக 236 ஓட்டங்களையும் (2017 - பாகிஸ்தான்), குறைந்த ஓட்டங்களாக 136 ஓட்டங்களையும் (2019 - நியூஸிலாந்து) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20