சீனாவில் வெளியாகும் ரஜினியின் 2.0

Published By: R. Kalaichelvan

05 Jun, 2019 | 12:29 PM
image

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த,அக்ஷயகுமார்,எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0

இத் திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் தயாரானது.கடந்த வருடம் நவம்பர் மாதம் 2.0 திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

600 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படம் 800 கோ ரூபா வரையில் வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இத் திரைப்படத்தை சீனாவை தவிர்தது உலகம் முழுவதும் திரையிட்டனர்.

அடுத்து சீனாவில் வெளியிடுவதற்கான பணிகளையும் தொடங்கினார்கள்.தற்போது அடுத்த மாதம் ஜூலை மாதம் 12 ஆம் திகதி சீனாவில் 2.0 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளதுடன்,10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடுகின்றனர்.

சீனா மொழியில் மொழி மாற்றம் செய்து ஆங்கில மொழி தலைப்புடன் வெளியிடுகின்றனர்.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படமும் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அமீர்க்கான் நடித்த 3 இடியட்ஸ்,தங்கல்,பிகே இந்தி படங்களும் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

அத்தோடு சீனாவில் தங்கல் படம் 1,229 கோடி வரை வசூல் ஈட்டியது.சீனா இது வரை அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் 24 ஆவது இடத்தை தங்கள் பிடித்தது.சீனாவில் சினிமா வர்த்தகம் லாபமான தொழிலாக பார்க்கப்படுகிறது.

அங்கு திரையரங்குகள் எண்ணிக்கையும் அதிகம் எனவேதான் சீனாவில் இந்தியப் படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37