5 ஆவது இடத்துக்கு முன்னேறிய மலிங்க வாஸை பின்னுக்குத் தள்ளுவாரா?

Published By: Vishnu

05 Jun, 2019 | 12:04 PM
image

லசித் மலிங்க ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் இங்கிலாந்தின் கார்டீப்பில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை  அணி வீரர்களின் அபார பந்து வீச்சினால் 34 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இப் போட்டியில் 6.4 ஓவர்கள் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மலிங்க யோக்கர் மூலம் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 43 விக்கெட்டுக்களுடன் 7 ஆவது இடத்தில் இருந்த லசித் மலிங்க இந்த மூன்று விக்கெட்டின் மூலம் மொத்தமாக 46 விக்கெட்டுக்களை கைப்பற்றி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

எனவே லசித் மலிங்க இதற்கு முனனர் 44 விக்கெட்டுக்களுடன் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் இருந்த இந்திய அணி வீரர்களான சகீர்கான் மற்றும் ஜவகல் சிறிநாத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி வீரர் கிளேன் மெக்ராத் 39 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், முத்தையா முரளிதரன் 40 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி வீரர் வஸிம் அக்ரம் 38 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்திலும், சமிந்த வாஸ் 31 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுக்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அத்துடன் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்னும் 10 விக்கெட்டுக்களை லசித் மலிங்க கைப்பற்றினால் பட்டியலில் நான்காவது இடத்திலுள்ள சமிந்த வாஸையும், வஸிம் அக்ரமையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திக்கு முன்னேறும் வாய்ப்பினை பெறலாம். ஆனாலும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரே லசித் மாலிங்கவின் இறுதி உலகக் கிண்ணத் தொடராகும்.

இதுவரை மொத்தமாக 220 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 325 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09